Connect with us

Entertainment

ரீஎன்ட்ரியில் மாஸ் காட்டிய கில்லி!

Published

on

2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்று விஜய் அவர்களுக்கு மாஸ் ஹிட் கொடுத்த படம். விஜய்யுடன் திரிஷா, பிரகாஷ் ராஜ், தாமு ஆகியோர் நடித்து ரசிகர்களை கவர்ந்த படம் தான் கில்லி. இந்த படம் சுமார 20 வருடம் கழித்து ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும் திரைக்கு வந்தது. அரசியல் என்ட்ரி கொடுத்த பிறகு விஜய்க்கு முதலில் வெளிவரும் படமாக வெளிவந்த கில்லி படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தனர். தமிழகத்தில் மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்தப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே இந்தப் படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வரிசைகளில் காத்திருந்து டிக்கெட் புக் செய்ததை பார்க்க முடிந்தது.

கில்லி திரைப்படம் மீண்டும் முதல் நாளில் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது இந்திய மறுவெளியீடுகளின் தெலுங்கு வெற்றிப்படங்களை முறியடித்து சாதனையைப் படைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரி ரிலீஸ் ஆனது என்றாலும் விஜயின் புதியப் படத்துக்கு எந்த அளவுக்கு கொண்டாட்டங்கள் இருக்குமோ அதே அளவு கொண்டாட்டம் கில்லி ரீ-ரிலீஸ் ஆன தியேட்டர்களிலும் காண முடிந்தது. திரைஅரகில் அப்படிப்போடு பாடலுக்கு திறை அரங்கில் ரசிகர்கள் அனைவரும் நடனமாடி ஆரவாரம் செய்தனர்.

ரீ ரிலீஸிலும் இந்தப் படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கில்லி அசுர வெற்றி அதிர்வுகளுடன் மீண்டும் பொழுது விடிந்துள்ளது. 2004-ம் ஆண்டு தொடங்கிய பயணம் 2024-ல் முழு வட்டம் நிறைவடைந்து மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

கோவை வி .எல்.பி கல்லுரி விழாவில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

Published

on

கோவையில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

கோவையை அடுத்த கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மாணவர்களின் இந்த கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாடல்களை பாடி அசத்தினார் . தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

Continue Reading

Entertainment

ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்

Published

on

நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாகத் திரையரங்குகளில் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், ‘வடம்’ திரைப்படத்தின் கதைக்களம் ஜல்லிக்கட்டைப் பற்றியது என்பதால், கோவையைச் சேர்ந்த ரசிகர்கள் ஒஒருவர் உண்மையான ஜல்லிக்கட்டு காளை ஒன்றை அலங்கரித்து தியேட்டருக்கு அழைத்து வந்தனர்.

கோவை நூறடி சாலையில் உள்ள திரையரங்கில் வடம் பட வெளியீட்டை மேள தாளம் முழங்க திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடினர்.

இதனிடையே படம் வெளியாகி உள்ள தி்ரையரங்க வளாகத்திற்கு ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த ரசிகர்கள் அந்தக் காளைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.நடிகர் விமலுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு ஆக்ஷன் கலந்த எதார்த்தமான படம் வெளிவந்துள்ளது. ஜல்லிக்கட்டின் ஒரு வகையான ‘வடமாடு’ விளையாட்டைப் போற்றும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால், ரசிகர்கள் காளையுடன் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில் ராஜசேகர்,வெங்கடேஷ்வரன் மற்றும் பிரபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவம் மற்றும் கிராமிய வீர விளையாட்டுகளைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Continue Reading

Entertainment

காதல், ஆக்ஷன், நிறைந்த கிறிஸ்துமஸ் ‘ரெட்ட தல’ – நடிகர் அருண் விஜய்

Published

on

பீ.டி.ஜி. யுனிவர்சல் நிறுவனம், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் ‘ரெட்ட தல’ திரைப்படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை கோவையில் நடைபெற்றது.

நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இட்னானி (வெந்து தணிந்தது காடு கதாநாயகி) மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய நடிகர் அருண் விஜய், “இது ஒரு நீண்ட விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் காலத்தில் வெளிவருகிறது. எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த படம் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

திரை ரசிகர்களுடன் எளிதில் கனெக்ட் ஆகும் ஒரு கதையாக இதை இயக்குனர் திருக்குமரன் உருவாக்கியுள்ளார் எனவும், தனது வலிமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதையாக இது தனக்கு கிடைத்துள்ளது எனவும் கூறினார்.

இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், அதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும், இருவருக்கும் சில வேறுபாடுகள் இருப்பதையும் காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாக கூறினார்.

அடிப்படையில் இந்த படம் காதலை மையமாகக் கொண்ட ஒரு படம் எனக் கூறிய அவர், “இதில் ஆசைக்கும் பேராசைக்கும் இடையே ஒரு சிறு கோடு உள்ளது. அந்த கோட்டை கடந்து சென்றால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், அதனால் ஏற்படும் சவால்கள் – இதை ஒரு மனிதன் எப்படி கடந்து செல்கிறான் என்பதை இந்த கதை காட்டும்,” என்றார்.
கதைக்கு எங்கெங்கே தேவையோ அங்கங்கே ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நிறைய ட்விஸ்ட்களும் எதிர்பாராத இடத்தில் திருப்பங்களும் இருக்கும். கண்டிப்பாக பார்வையாளர்களை இந்த படம் தனது கைக்குள் வைத்திருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ஸின் இசை இந்த படத்தை மேலும் ஒரு கட்டத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறிய அவர், இப்படத்தில் நடிகர் தனுஷ் ‘கண்ணம்மா’ எனும் பாடலை பாடியிருக்கிறார் என்று கூறினார்.

Continue Reading

Trending