Connect with us

செய்திகள்

கோவையில் முதன் முறையாக பெண்களுக்கான பிசிஓஎஸ்/பிசிஓடி மையம் துவக்கம்!

Published

on

சினைப்பை நீர் கட்டி பிரச்னைக்கு தீர்வு காண ஏஜிஎஸ் ஹெல்த்கேர் புதிய சிறப்பு மையத்தை உருவாக்கியுள்ளது.

 இது குறித்து ஏஜிஎஸ் ஹெல்த் கேர் கிளினிக் இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன் கூறியதாவது:

சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை (PCOS), பெண்களுக்கு இனப்பெருக்க ஆண்டுகளில்  ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இருப்பின், பெண்களுக்கு அடிக்கடி மாதவிடாய் ஏற்படாது அல்லது பல நாட்களுக்கு இருக்காது. பெண்களுக்கு ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரித்தால், சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை ஏற்படலாம். குறிப்பாக, மலட்டுத்தன்மை, கர்ப்பகால சர்க்கரை நோய் அல்லது கருவுற்ற நிலையில் அதிக ரத்த அழுத்தம் ஏற்படுதல், கருச்சிதைவு அல்லது குறைபிரசவம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

 சினைப்பை நீர் கட்டிகளால் பெண்களுக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இது, உணர்வுப்பூர்வமாக பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு அவர்களது குடும்பத்தினருக்கும் நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது. பல்வேறு சூழ்நிலைகளில், இது குடும்பங்களிடையே பிரிவையும் கூட ஏற்படுத்துகிறது. ஆனால், இந்த  சினைப்பை நீர்க்கட்டி பிரச்னையானது, அதிக ஹார்மோன் சுரப்பாலும், இன்சுலின் எதிர்ப்பாலும் ஏற்படுகிறது. இதை சிறுவயதிலேயே கண்டறிய முடியும். வயது, சிறந்த உணவு பழக்க வழக்கங்கள், உடல்பயிற்சி  மற்றும் மனநல ஆலோசனைகள் மேற்கொண்டு சரி செய்ய முடியும். மனரீதியான, உடல் ரீதியாக மட்டுமின்றி, நிதிச்சுமையையும் குறைக்க முடியும்.

 இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காண கோவை நகரில்  பன்னோக்கு மருத்துவமைனயான ஏஜிஎஸ் ஹெல்த்கேர் ஒரு சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களைக் கொண்ட ஒரு அணியை கொண்டுள்ளது. ஒரு மருத்துவர், மகப்பேறு ஆலோசகர், கதிர்வீச்சியல் நிபுணர், பயிற்சி பெற்ற உணவுமுறை, நுண்ணுாட்டசத்து பயிற்சியாளர். உடற்பயிற்சியாளர், தோல்நோய் சிகிச்சையாளர் உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து நோயாளியின் பிரச்னைகளை அறிந்து சிகிச்சை தருகின்றனர்.

 இந்த கிளினிக், ஆகஸ்ட் 18 முதல் ஒவ்வொரு வெள்ளி கிழமையன்று (பகல் 12 மணி முதல் மாலை 4.00 மணிவரை) செயல்படும்.

 சிகிச்சை பெற விரும்புவோர் 9659455556 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஒரு நாள் முன்பாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 சினைப்பை நீர் கட்டி சிக்கலில் இருந்து பெண்கள் விடுபட, 77 வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ல் இந்த கிளினிக்கை துவக்குகிறோம். பெண்களின் விடுதலைக்காகவும், அவர்களது வலிமைக்காகவும் இணைந்து போராடுவோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்திகள்

சொல்லுவதை செய்வோம் செய்வதைத்தான் சொல்லுவோம் – கனிமொழி பரப்புரை!

Published

on

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் கவுண்டம்பாளையம் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷை ஆதரித்து திமுக துணை பொது செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.

இதில் பேசிய கனிமொழி, இந்த வேட்பாளர் அன்னை சோனியா காந்தி தேர்ந்தெடுத்து கை உங்கள் கைகளில் ஒப்படைத்து இருக்கக்கூடிய வேட்பாளர், ராகுல் காந்தி உங்களுக்காக அனுப்பி வைத்திருக்க கூடிய வேட்பாளர், இவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து அரசியல் ஆர்வம் கொண்டு அரசியலில் இணைத்துக் கொண்டு இருப்பதை என்னிடம் தெரிவித்தார், இந்த நாட்டை மதத்தின் பெயரால் பிரிக்கக்கூடிய பாஜக ஆர் எஸ் எஸ் கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன் என கூறியிருக்கிறார், இதைக் கேட்கும் போதே மனமகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

இந்த நாட்டைப் பிரிக்க நினைப்பவர்களை எதிர்க்கக் கூடிய ஒரு கூட்டணியாக நம் கூட்டணி உள்ளது, இந்த நாட்டு மக்களை ஒருமைப்படுத்த கூடிய கூட்டணியாக சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் அத்தனை பேரும் உரிமைகளுக்காகவும் பாடுபடக்கூடிய இந்தக் கூட்டணி தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்றார்.

Continue Reading

செய்திகள்

தேர்தலுக்கு பின் விஜய் இதை கண்டிப்பாக செய்வார் – பியூஷ் கோயல்

Published

on

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

“தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக இடையில் ரகசிய உடன்பாடு இருக்கிறது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்தவே விஜய் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் கண்டிப்பாக நடிக்க சென்றுவிடுவார். இதன் காரணமாகவே திமுக – விஜய் இடையில் மறைமுக கூட்டணி உள்ளது என்று சொல்கிறோம். திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் பாதுகாத்து என்டிஏ பக்கம் கொண்டு வருவோம். ஒவ்வொரு வீடாக சென்று ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றுவோம். முதல்வர் ஸ்டாலின் ஒரு குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துகிறார். ஒரேயொரு குடும்பம் தமிழ்நாட்டை நாசமாக்கி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் இந்த மாநிலத்தை வழிநடத்தினால், அவருக்கு மக்களின் உணர்வுகளோ, கலாச்சார பண்புகளோ புரியாது. திமுக ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியின் ஆட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

என்டிஏ கூட்டணி ஆட்சி நிச்சயமாக வளர்ச்சியை கொடுக்கும். அதிமுக, பாஜக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒரே கோட்டில் இயங்குகின்றன. என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெரிய அளவிலான நகர்ப்புற திட்டங்களை உருவாக்குவோம். அதேபோல் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. ஒரு தலைவனாக உருவாக வேண்டும் என்றால் நீண்ட ஆண்டுகளில் மக்கள் சேவையில் இருந்திருக்க வேண்டும். வெறும் பிரபலமாக இருப்பது மட்டும் முதல்வராக தகுதியாக இருக்க முடியாது. இந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.”

Continue Reading

செய்திகள்

 பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published

on

 பாஜக வேட்பாளர் பட்டியல்

விளவங்கோடு: எஸ். விஜயதரணி

அறந்தாங்கி: கவிதா ஸ்ரீகாந்த்

உதகமண்டலம்: போஜராஜன்

அவினாசி (SC): டாக்டர் எல். முருகன்

திருப்பூர் (தெற்கு): எஸ். தங்கராஜ்

கோயம்புத்தூர் (வடக்கு): வானதி சீனிவாசன்

திருவண்ணாமலை: சி. ஏழுமலை

ராசிபுரம் (SC): டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்

மொடக்குறிச்சி: கீர்த்திகா சிவகுமார்

திருவாரூர்: கோவி சந்துரு

தஞ்சாவூர்: எம். முருகானந்தம்

கந்தர்வகோட்டை (SC): சி. உதயகுமார்

புதுக்கோட்டை: என். ராமச்சந்திரன்

திருப்பத்தூர்: கே.சி. திருமாறன்

மானாமதுரை (SC): பொன். வி. பாலகணபதி

மதுரை தெற்கு: பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்

சாத்தூர்: நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம்: ஜி.பி.எஸ். கே. நாகேந்திரன்

திருச்செந்தூர்: கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்

வாசுதேவநல்லூர் (SC): அனந்தன் அய்யாசாமி

ராதாபுரம்: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

நாகர்கோவில்: எம்.ஆர். காந்தி

குளச்சல்: டி. சிவகுமார் ப

த்மநாபபுரம்: பி. ரமேஷ்

 

Continue Reading

Trending