Connect with us

Entertainment

யோ ! நெல்சன் இத்தனை நாள் எங்கய்யா இருந்த ??? அலப்பறை கிளப்பும் ரசிகர்கள் ! FDFS REVIEW!

Published

on

இயக்குனர் நெல்சன் இயக்கியதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 169-வது திரைப்படமான ஜெயிலர் இன்று வெளியாகியுள்ளது . இப்படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் . இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் வஸந்த் ரவி, யோகிபாபு . மலையாள நடிகர் விநாயகன் மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 10 2023) வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம் :

இப்படம் இன்று(ஆகஸ்ட் 10 2023) உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியானது . இப்படத்தின் முதல் காட்சி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காலை திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே ரஜினிகாந்தின் ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்து பட்டாசு வெடித்து, பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர். ஜெயிலர் படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது .

பாராட்டு மழையில் நெல்சன் :

ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் நெல்சனை புகழ்ந்து தள்ளியுள்ளார் ” நெல்சன் இத்தனை நாள் எங்கய்யா இருந்திங்க??? #ஜெயிலர் வ அடிச்சிக்கிற மாதிரி இனி எவனும் படம் எடுக்க முடியாது. உங்க அமைதியின் வெளிப்பாடு அதிரடியா இருக்கு. #jailer வேற லெவல் படம். என பதிவிட்டுள்ளார்.

மாற்றுரு ரசிகர் கூறும் பொது :

ஜெயிலர் பற்றி உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி தரும்
அலப்பரை அதிகபட்சம்!

#நெல்சன் தனது பணியை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்.

#Jailer – “Ratham”aarey.. Blockbuster Nelson Sambavam

2nd Half Vera Mari veramariiiiiiii

Lots of surprise moments & special treat for thalaivar fans

Climax veriatttammmmm 💥💥💥 gone Blast… #JailerFDFS

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

கோவை வி .எல்.பி கல்லுரி விழாவில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

Published

on

கோவையில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

கோவையை அடுத்த கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மாணவர்களின் இந்த கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாடல்களை பாடி அசத்தினார் . தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

Continue Reading

Entertainment

ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்

Published

on

நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாகத் திரையரங்குகளில் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், ‘வடம்’ திரைப்படத்தின் கதைக்களம் ஜல்லிக்கட்டைப் பற்றியது என்பதால், கோவையைச் சேர்ந்த ரசிகர்கள் ஒஒருவர் உண்மையான ஜல்லிக்கட்டு காளை ஒன்றை அலங்கரித்து தியேட்டருக்கு அழைத்து வந்தனர்.

கோவை நூறடி சாலையில் உள்ள திரையரங்கில் வடம் பட வெளியீட்டை மேள தாளம் முழங்க திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடினர்.

இதனிடையே படம் வெளியாகி உள்ள தி்ரையரங்க வளாகத்திற்கு ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த ரசிகர்கள் அந்தக் காளைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.நடிகர் விமலுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு ஆக்ஷன் கலந்த எதார்த்தமான படம் வெளிவந்துள்ளது. ஜல்லிக்கட்டின் ஒரு வகையான ‘வடமாடு’ விளையாட்டைப் போற்றும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால், ரசிகர்கள் காளையுடன் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில் ராஜசேகர்,வெங்கடேஷ்வரன் மற்றும் பிரபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவம் மற்றும் கிராமிய வீர விளையாட்டுகளைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Continue Reading

Entertainment

காதல், ஆக்ஷன், நிறைந்த கிறிஸ்துமஸ் ‘ரெட்ட தல’ – நடிகர் அருண் விஜய்

Published

on

பீ.டி.ஜி. யுனிவர்சல் நிறுவனம், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் ‘ரெட்ட தல’ திரைப்படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை கோவையில் நடைபெற்றது.

நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இட்னானி (வெந்து தணிந்தது காடு கதாநாயகி) மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய நடிகர் அருண் விஜய், “இது ஒரு நீண்ட விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் காலத்தில் வெளிவருகிறது. எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த படம் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

திரை ரசிகர்களுடன் எளிதில் கனெக்ட் ஆகும் ஒரு கதையாக இதை இயக்குனர் திருக்குமரன் உருவாக்கியுள்ளார் எனவும், தனது வலிமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதையாக இது தனக்கு கிடைத்துள்ளது எனவும் கூறினார்.

இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், அதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும், இருவருக்கும் சில வேறுபாடுகள் இருப்பதையும் காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாக கூறினார்.

அடிப்படையில் இந்த படம் காதலை மையமாகக் கொண்ட ஒரு படம் எனக் கூறிய அவர், “இதில் ஆசைக்கும் பேராசைக்கும் இடையே ஒரு சிறு கோடு உள்ளது. அந்த கோட்டை கடந்து சென்றால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், அதனால் ஏற்படும் சவால்கள் – இதை ஒரு மனிதன் எப்படி கடந்து செல்கிறான் என்பதை இந்த கதை காட்டும்,” என்றார்.
கதைக்கு எங்கெங்கே தேவையோ அங்கங்கே ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நிறைய ட்விஸ்ட்களும் எதிர்பாராத இடத்தில் திருப்பங்களும் இருக்கும். கண்டிப்பாக பார்வையாளர்களை இந்த படம் தனது கைக்குள் வைத்திருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ஸின் இசை இந்த படத்தை மேலும் ஒரு கட்டத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறிய அவர், இப்படத்தில் நடிகர் தனுஷ் ‘கண்ணம்மா’ எனும் பாடலை பாடியிருக்கிறார் என்று கூறினார்.

Continue Reading

Trending