Connect with us

அரசியல்

நெற்பயிர்களை அழித்து, அவர்களது வயிற்றில் அடிக்கும் என்.எல்.சி – சசிகலா கண்டனம் !

Published

on

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, மேல் வளையமாதேவி பகுதியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை அழித்து, அவர்களது வயிற்றில் அடிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு பாதுகாப்பு அரணாக துணை நிற்கும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்.எல்.சி. நிர்வாகம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.

இதற்கு பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில் என்.எல்.சி. நிர்வாகத்தால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடங்களான சேத்தியாதோப்பு, வளையமாதேவி சுற்று வட்டார பகுதிகளில், இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெற்பயிர்கள் அறுவடை செய்ய இருக்கும் நிலையில் இன்று அதிகாலையிலேயே 35 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணியை தொடங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நெற்பயிர்களை சாகுபடி செய்து வரும் சூழலில், அவர்களின் கருத்துக்களை அறிந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடாத வகையில் என்.எல்.சி நிர்வாகம் செயல்படவேண்டும். திமுக அரசும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் என்.எல்.சி நிர்வாகத்திடம் கலந்து பேசி விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, தமிழக அரசே விவசாயிகளுக்கு எதிராக நடப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை. இதற்காகவா மக்கள் வாக்களித்தனர். எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு என்.எல்.சி நிர்வாகத்தின் அத்துமீறல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல்

வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

Published

on

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி nநடைபெற இருக்கிறது , அனைத்து கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கிய நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக அறிவிக்கப்படாமல் இருந்தது . இன்று இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

வேட்பாளர் பட்டியல்

பொன்னேரி (எஸ்சி)- துரை சந்திரசேகர்

வேளச்சேரி- அசன் மௌலானா

ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி)- செல்வப்பெருந்தகை

சோளிங்கர்- ஏ.எம். முனிரத்தினம்

ஊத்தங்கரை (எஸ்சி)- ஆர்.குப்புசாமி

கிருஷ்ணகிரி- ஏ. செல்ல குமார்

பென்னாகரம்- ஜிகேஎம் தமிழ் குமரன்

ஆத்தூர் (எஸ்சி)- எஸ்.கே.அர்த்தனாரி

ஈரோடு கிழக்கு- கோபிநாத் பழனியப்பன்

உதகமண்டலம்- பி.ராமச்சந்திரன்

கவுண்டம்பாளையம்- கே.பி. சூர்ய பிரகாஷ்

சிங்காநல்லூர்- V. ஸ்ரீநிதி நாயுடு

துறையூர் (எஸ்சி)- விச்சு லெனின் பிரசாத்

கடலூர்- ஏ.எஸ். சந்திரசேகரன்

மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகமது

அறந்தாங்கி- டி.ராம சந்திரன் காரைக்குடி- எஸ்.மாங்குடி

உசிலம்பட்டி- டி.சரவண குமார்

சிவகாசி- கணேசன் அசோகன்

திருவாடானை- ராம கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம்- எஸ்.ஊர்வசி அமிர்தராஜ்

சங்கரன்கோவில் (எஸ்சி)- சங்கை கணேசன்

அம்பாசமுத்திரம்- வி.பி. துரை

நாங்குநேரி- ரூபி மனோகரன்

குளச்சல்- டாக்டர் தாரகை குத்பர்ட்

விளவங்கோடு- டி.டி.பிரவீன்

கிள்ளியூர்- எஸ். ராஜேஷ் குமார்

Continue Reading

அரசியல்

தேர்தலில் பிரச்சாரம் அண்ணாமலை உறுதி

Published

on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட அறிவிக்கபட்டுள்ள வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஊழல், அலட்சியம் மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்த… தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதர சகோதரிகளின் பெரும் ஆதரவை பாஜக வேட்பாளர் அனைவரும் பெற்றுள்ளனர்.

நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பரந்த அளவிலும், ஒரு நோக்கத்துடனும் முன்னேறியுள்ளது.

தேசம் முன்னேறிச் செல்லும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவமிக்க, சுயநலமிக்க திமுக அரசால் தமிழகம் பின்தங்கியுள்ளது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தொண்டனாகிய நான், வெற்றி பெறும் நமது பாஜக மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்.

Continue Reading

அரசியல்

தமிழக தேர்தல் – இன்று வேட்புமனு தாக்கல்

Published

on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று தொடங்குகிறது

இன்று தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி 11AM – 3PM வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மனுக்கள் மறுநாள் (ஏப்-7) பரிசீலிக்கப்பட உள்ளன

வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9ஆம் தேதியே கடைசி நாளாகும்

Continue Reading

Trending