Connect with us

அரசியல்

முதலமைச்சர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! ரூ. 15 லட்சம் விவகாரம் !

Published

on

ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் – இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜூன் 9-ம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சிக்கிறார்கள். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஒரு நபருக்கு ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதிமொழி தந்தார். ஆனால், ரூ. 15 கூட தரவில்லை” என, பிரதமர் மோடி பேசாத ஒன்றை, அப்பட்டமான பொய்யை கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் கூறியிருக்கிறார். 2014 மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, “வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ. 15 லட்சம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும்” என்றார். ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களின் பினாமி தொழிலதிபர்களும் பதுக்கிய பணத்தின் அளவை, மக்களுக்கு புரிய வைப்பதற்காக அவ்வாறு பிரதமர் மோடி பேசினார். ஆனால், இந்த உண்மையை திட்டமிட்டு மறைத்து விட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார் என, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஊழலில் திளைத்த, திளைக்கும் கட்சிகள் மக்களிடம் பொய்யை பரப்பி வருகின்றனர். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், இந்த கட்டுக்கதையை பரப்பி மக்களை ஏமாற்ற நினைத்தார்கள்.

ஆனால், மக்களிடம் அது எடுபடவில்லை. 2014-ல் 282 தொகுதிகளில் வென்ற பாஜக, 2019-ல் 303 தொகுதிகளில் வென்றது. ரூ. 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி வாக்களித்தார் என, முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர்கள், திமுக தலைவர்களும் தொடர்ந்து கட்டுக்கதையை பரப்பி வருகின்றனர். முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதியும் இந்த புரட்டை திரும்ப திரும்ப கூறி வருகிறார். முதலமைச்சர், அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி வருவது கடும் கண்டனத்திற்குரியது. இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் வெளியிட வேண்டும். இல்லையெனில் தாங்கள் பேசியதற்கு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது

அரசியல்

வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

Published

on

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி nநடைபெற இருக்கிறது , அனைத்து கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கிய நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக அறிவிக்கப்படாமல் இருந்தது . இன்று இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

வேட்பாளர் பட்டியல்

பொன்னேரி (எஸ்சி)- துரை சந்திரசேகர்

வேளச்சேரி- அசன் மௌலானா

ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி)- செல்வப்பெருந்தகை

சோளிங்கர்- ஏ.எம். முனிரத்தினம்

ஊத்தங்கரை (எஸ்சி)- ஆர்.குப்புசாமி

கிருஷ்ணகிரி- ஏ. செல்ல குமார்

பென்னாகரம்- ஜிகேஎம் தமிழ் குமரன்

ஆத்தூர் (எஸ்சி)- எஸ்.கே.அர்த்தனாரி

ஈரோடு கிழக்கு- கோபிநாத் பழனியப்பன்

உதகமண்டலம்- பி.ராமச்சந்திரன்

கவுண்டம்பாளையம்- கே.பி. சூர்ய பிரகாஷ்

சிங்காநல்லூர்- V. ஸ்ரீநிதி நாயுடு

துறையூர் (எஸ்சி)- விச்சு லெனின் பிரசாத்

கடலூர்- ஏ.எஸ். சந்திரசேகரன்

மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகமது

அறந்தாங்கி- டி.ராம சந்திரன் காரைக்குடி- எஸ்.மாங்குடி

உசிலம்பட்டி- டி.சரவண குமார்

சிவகாசி- கணேசன் அசோகன்

திருவாடானை- ராம கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம்- எஸ்.ஊர்வசி அமிர்தராஜ்

சங்கரன்கோவில் (எஸ்சி)- சங்கை கணேசன்

அம்பாசமுத்திரம்- வி.பி. துரை

நாங்குநேரி- ரூபி மனோகரன்

குளச்சல்- டாக்டர் தாரகை குத்பர்ட்

விளவங்கோடு- டி.டி.பிரவீன்

கிள்ளியூர்- எஸ். ராஜேஷ் குமார்

Continue Reading

அரசியல்

தேர்தலில் பிரச்சாரம் அண்ணாமலை உறுதி

Published

on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட அறிவிக்கபட்டுள்ள வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஊழல், அலட்சியம் மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்த… தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதர சகோதரிகளின் பெரும் ஆதரவை பாஜக வேட்பாளர் அனைவரும் பெற்றுள்ளனர்.

நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பரந்த அளவிலும், ஒரு நோக்கத்துடனும் முன்னேறியுள்ளது.

தேசம் முன்னேறிச் செல்லும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவமிக்க, சுயநலமிக்க திமுக அரசால் தமிழகம் பின்தங்கியுள்ளது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தொண்டனாகிய நான், வெற்றி பெறும் நமது பாஜக மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்.

Continue Reading

அரசியல்

தமிழக தேர்தல் – இன்று வேட்புமனு தாக்கல்

Published

on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று தொடங்குகிறது

இன்று தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி 11AM – 3PM வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மனுக்கள் மறுநாள் (ஏப்-7) பரிசீலிக்கப்பட உள்ளன

வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9ஆம் தேதியே கடைசி நாளாகும்

Continue Reading

Trending