Connect with us

Entertainment

சூர்யா தான் என்னுடைய பேவரிட்! – ஆதிரா ராஜ்

Published

on

ஆதிரா ராஜ் பற்றி ?

என்னுடைய முழுப் பெயர் ஆதிராராஜ் நான் கேரளா பொண்ணு, பள்ளி, கல்லூரி அனைத்தும் கேரளாவில் தான் முடித்தேன், நான் பி.காம் முடித்துள்ளேன், நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர்.

சினிமா ஆர்வம் எப்போது வந்தது?

சின்ன வயசுல  நிறைய ட்ராமா பண்ணீருக்கேன், அப்புறம் ஸ்டேஜ் ஷோ பண்ணிருக்கேன் அப்பொழுது எல்லாம் சினிமாவில் நடிப்பேன் என நினைக்கவில்லை, அந்த எண்ணமும் அப்பொழுது வரவில்லை. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது ஒரு குறும்படம் நடக்க வாய்ப்பு கிடைத்தது அதில் நடித்த பிறகு தான் சினிமா மேல் ஆசை வந்தது. அதன் பின்னர் தான் சினிமாவில் நடிக்க முடிவுசெய்தேன்.

பட வாய்ப்புகள் எப்படி கிடைத்தது ?

மலையாள குறும்படம் நடித்த பிறகு கஸ்டீம் இயக்குனர் ஒருவர் என்னுடைய புகைப் படத்தை ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தார் அதன் பின்னர் சென்னையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது பின்னர் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஹிப் ஹாப் தமிழா உடன் நடித்த அனுபவம் ?

ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒரு சிறந்த கலைஞர், நடிப்பில் அதிக ஆர்வம் உடையவர். அவருடன் நடிக்கும் பொழுது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். நடிப்பை பற்றி எனக்குள் இருந்த சந்தேகங்களை போக்கியவர். நல்ல மனிதர்.

உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்? ஏன் ?

நடிகர் சூர்யா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவரது நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகை, அவருடைய படம் அனைத்தையும் தவறாமல் பார்த்துவிடுவேன்.

யார்கூட எல்லாம் நடிக்கணும் என்று லிஸ்ட் இருக்கா?

லிஸ்ட் எல்லாம் ஒன்னும் இல்லை, எனக்கு எல்லோருடையும் நடிக்கணும் என்று ஆசை. சிறந்த நடிகை என பெயர் எடுக்கணும் இது நிறைவேற பாடுபடுவேன்.

சினிமாவிற்குள் வர, உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன் ?

என்னுடைய தாத்தா தான் எனக்கு மிகப்பெரிய   இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு நடிகர். பல மலையாள திரைப்படம் மற்றும்    நாடகத்தில் நடித்துள்ளார். அவரால்    தான் எனக்கு சினிமா மீது அதீத ஆர்வம் வந்தது. அவருடன் நிறைய ட்ராமா நடிச்சிருக்கேன்.  பெரிய திரையில் என்னைப்  பார்க்க வேண்டும் ஆசை என பட்டார். இன்று அவரது      ஆசை நிறைவேறியது ஆனால் அதைப் பார்க்க அவர் இன்று உயிருடன் இல்லை.

உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணம் எது ?

சினிமா ஆசை உள்ள எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும் ஒருமுறையாவது பெரியத்திரையில் நாம் வந்துவிட வேண்டும் என்று எனக்கும் அந்த ஆசை இருந்தது அது இந்தப் படத்தின் மூலம் சாத்தியமாயிற்று. என்னை  ஒரு கதாநாயகியாக பெரியத் திரையில் பார்த்தது தான் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம்.

உங்கள் குடும்பத்தை பற்றி?

நான், அப்பா ராஜன், அம்மா பிரீத்தி ராஜன , தம்பி அமல் ராஜ் எனக்கு என்றும் உறுதுணையாக இருப்பது இந்த மூன்று பேர்கள் தான்.

முதல் கேமரா அனுபவம் எப்படி இருந்தது விளக்கமாக சொல்லுங்க?

முதல் கேமரா அனுபவம் ரொம்ப பயமாக இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டேன் பயத்தை போக்க, குறும் படம் நடிக்கும் பொழுது இரண்டு அல்லது நான்கு பேர் தான் இருப்பார்கள் அதனால் பயம் தெரியவில்லை. ஆனால் சினிமா அப்படி கிடையாது, கோ ஆர்ட்டிஸ்ட், டைரக்டர், அசிஸ்ட்டேன்ட டைரக்டர், லைட் மேன், ஹெல்பர் என பல பேர் இருப்பாங்க ரொம்ப பயமா இருக்கும். படம் நடித்து முடித்த பிறகு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

காதல், ஆக்ஷன், நிறைந்த கிறிஸ்துமஸ் ‘ரெட்ட தல’ – நடிகர் அருண் விஜய்

Published

on

பீ.டி.ஜி. யுனிவர்சல் நிறுவனம், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் ‘ரெட்ட தல’ திரைப்படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை கோவையில் நடைபெற்றது.

நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இட்னானி (வெந்து தணிந்தது காடு கதாநாயகி) மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய நடிகர் அருண் விஜய், “இது ஒரு நீண்ட விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் காலத்தில் வெளிவருகிறது. எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த படம் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

திரை ரசிகர்களுடன் எளிதில் கனெக்ட் ஆகும் ஒரு கதையாக இதை இயக்குனர் திருக்குமரன் உருவாக்கியுள்ளார் எனவும், தனது வலிமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதையாக இது தனக்கு கிடைத்துள்ளது எனவும் கூறினார்.

இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், அதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும், இருவருக்கும் சில வேறுபாடுகள் இருப்பதையும் காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாக கூறினார்.

அடிப்படையில் இந்த படம் காதலை மையமாகக் கொண்ட ஒரு படம் எனக் கூறிய அவர், “இதில் ஆசைக்கும் பேராசைக்கும் இடையே ஒரு சிறு கோடு உள்ளது. அந்த கோட்டை கடந்து சென்றால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், அதனால் ஏற்படும் சவால்கள் – இதை ஒரு மனிதன் எப்படி கடந்து செல்கிறான் என்பதை இந்த கதை காட்டும்,” என்றார்.
கதைக்கு எங்கெங்கே தேவையோ அங்கங்கே ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நிறைய ட்விஸ்ட்களும் எதிர்பாராத இடத்தில் திருப்பங்களும் இருக்கும். கண்டிப்பாக பார்வையாளர்களை இந்த படம் தனது கைக்குள் வைத்திருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ஸின் இசை இந்த படத்தை மேலும் ஒரு கட்டத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறிய அவர், இப்படத்தில் நடிகர் தனுஷ் ‘கண்ணம்மா’ எனும் பாடலை பாடியிருக்கிறார் என்று கூறினார்.

Continue Reading

Entertainment

பானு பேக் ஹவுஸ் கிறிஸ்துமஸ் ஃப்ரூட் மிக்ஸிங் விழா சென்னையில் மகிழ்ச்சியுடன் நடைபெற்றது.

Published

on

சென்னை தி.நகர் ராஜ் பேலஸ் ஹோட்டலில், பானு பேக் ஹவுஸ் சார்பில் கிறிஸ்துமஸ் கேக் ஃப்ரூட் மிக்ஸிங் விழா சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு வண்ணங்களில் உலர் பழங்கள், மசாலா வாசனைகள் மற்றும் நறுமணச் சாறு சேர்த்து கலந்த இந்த பாரம்பரிய நிகழ்வு, பண்டிகைக் காலத்தின் இனிய தொடக்கமாக அமைந்தது.

Women Professional Connect குழுவின் ஒத்துழைப்பில் நடைபெற்ற இந்த விழாவில், விருந்தினர்கள் செயல் பூர்வமாக கலந்து கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

மிஸ்ஸ் சங்கீதா கிங்ஸ்லி, ரேணுகா கவுரிசங்கர், இந்திரா கண்டசாமி, வகீதா பானு ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

பானு பேக் ஹவுஸ் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் ஃப்ரூட் மிக்ஸிங் சொய்ரே, இந்த ஆண்டும் உற்சாகக் குரலில் தொடங்கியது.

டேபிள் முழுவதும் பரவிய வண்ணமயமான உலர் பழங்கள், அதன் மீது மிதமாக தாக்கிய சின்னமன், லவங்க, ஜாதிக்காய் வாசனைகள்—அனைவரையும் கிறிஸ்துமஸ் உலகுக்குள் அழைத்துச் சென்றது.

விருந்தினர்கள் இணைந்து உலர் பழங்களை கலக்கி பண்டிகை காலத்தை உற்சாகமாக வரவேற்றனர்.

செஃப் பானு ரேகா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டுப் பழக்கலவையில், ஒருங்கிணைப்பு, மகிழ்ச்சி, பகிர்வு ஆகியவை பிரதிபலித்தன.

கூடுதல் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள –

பானு பேக் ஹவுஸ் – சென்னை

+91 94438 55959

Continue Reading

Entertainment

ரஜினிகாந்தின் 173வது ரஜினிகாந்த், கமலுடன் இணையும் சுந்தர்.சி!

Published

on

ரஜினிகாந்தின் 173வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிக்க இருக்கிறது பிரபல இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தை இயக்குகிறார். 2027 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினிகாந்தின் 173வது படம் தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading

Trending