Connect with us

Entertainment

திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா!

Published

on

தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம், டிஜெஏ சர்வதேச அமைப்பின் சார்பில் அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை திறப்பு விழா நடைபெற்றது,

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் “மாலை முரசு” கு.சிற்றரசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வே.பசுபதி வரவேற்புரையாற்றினார்.தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலப் பொதுச் செயலாளரும், ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் நிறுவனருமான அ.சி.தென்னரசு அழகேசன் மற்றும் மாநில மகளிரணிச் செயலாளர் திருமதி. பத்மா மாரியப்பன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர். த.இரா.கவியரசு அவர்கள் கலந்து கொண்டு அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

சேலம் ஏ.எம்.குழுமத்தின் இயக்குநர் “சேவைச் செம்மல்” ஐ.அதாம் பாஷா அவர்கள் பெயர் பலகையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்… தலைமை ஆசிரியர் திர.சிங்காரவேலு, சிலை அமைப்பு குழு திருவாளர்கள்: செல்வம்.தீர்த்தகிரி, த.திருஞானம், தி.திருமலைவாசன், அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் திரு. சூர்யாதனபால், திமுக நகரச் செயலாளர் திரு. முல்லைரவி, பொதுக்குழுக் உறுப்பினர் திருமதி. கலைவாணி,ஆசிரியர் திரு.எ.கொ.அம்பேத்கர், நக்கீரன் செய்தியாளர் திரு.ஏ.அருண்பாண்டியன், குமுதம் இதழ் செய்தியாளர்
திரு. ஜி.கிருஷ்ணன்,இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை மாநிலச் செயலாளர் டாக்டர்.அசோக் ஜி, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் திரு.அ.இறையருள், ஊத்தங்கரை அலினா சில்க்ஸ் உரிமையாளர் திரு.சையத்பாபு,புளியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. எஸ்.ஆர்.ரங்கநாதன்,

ஆத்தூர் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர்.எஸ்.செந்தில் குமார்,மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்.திருமதி. சரளாசண்முகம்,சிபிஐ மாவட்டத் துணைச் செயலாளர் திரு.தமிழ்குமரன், பாமக தருமபுரி (கி) மாவட்டத் தலைவர் திரு. கு.அல்லிமுத்து, அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் இரா.அயோத்திராஜ்,தேசியப் பொதுச்செயலாளர் தஞ்சை.கவிஞர் த.சுமித்ரா,தேசியச் செயலாளர் “மாலை முரசு” ம.ராஜாராம்,மாநில ஒருங்கிணைப்பாளர் “தமிழன் டிவி” மு.அருள்,மாநிலத் துணைச் செயலாளர் இரு.சங்கர்,மாநில துணை ஒருங்கிணைப்பாளர் நாமக்கல் இரா.நாகராஜ்,வடக்கு மண்டலச் செயலாளர் “கேப்டன் நியூஸ்” இரா. காளிதாஸ்,வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் “எவரெஸ்ட்” ஏ.விஜயமூர்த்தி,வழக்கறிஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் வழக்கறிஞர்.நெப்போலியன்,கலை இலக்கிய அணி மாநிலத் தலைவர் Amb.Dr.ADB.வினோத் ராம் குமார்,தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் மா.இராமமூர்த்தி,தருமபுரி மாவட்ட நிர்வாகிகள்: தலைவரின் தனிச் செயலாளர் “அதிரடி” மா.ஆனந்த்குமார், மா.கார்த்திக், நந்தகுமார் ,புஷ்பலிங்கம்,அருண் பிரபு, முனியப்பன், வீரமணி, வழக்கறிஞர்.மாரியப்பன்,கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர் சா.மதியழகன், மாவட்ட பொருளாளர் எம்.சி.அசோக், மாவட்ட இணைச் செயலாளர் தினசங்கு இரா. சுரேஷ்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கிருபாகரன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் தீபநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலாஜி, சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பிரபாகர்,மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ தேவி, மா.ஆறுமுகம்.நாமக்கல் மாவட்டத் தலைவர் சீ. செந்தில்முருகன்,சேலம் மத்திய மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி,சேலம் மாவட்டச் செய்தித் தொடர்பாளர் நவ்சாத்,சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராசு,சேலம் மாவட்ட வழக்கறிஞர் அணி வேலு,விழுப்புரம் மாவட்டத் தலைவர் ஏ.ஜெயமூர்த்தி,திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பா.சிவக்குமார்,
கோவை மாவட்ட கலை இலக்கிய அணி மாரியம்மாள்,திமுக மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் வெங்கடேசன், ரகுராமன்,நாகராஜ் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவர்கள் , தமிழ் ஆர்வலர்கள் ,சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்,

நிகழ்ச்சி நிறைவாக உள்ளாட்சி ரவுண்ட்ஸ் மாவட்டப் புகைப்படக் கலைஞர் விக்னேஷ் நன்றியுரையாற்றினார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

கோவை வி .எல்.பி கல்லுரி விழாவில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

Published

on

கோவையில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

கோவையை அடுத்த கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மாணவர்களின் இந்த கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாடல்களை பாடி அசத்தினார் . தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

Continue Reading

Entertainment

ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்

Published

on

நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாகத் திரையரங்குகளில் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், ‘வடம்’ திரைப்படத்தின் கதைக்களம் ஜல்லிக்கட்டைப் பற்றியது என்பதால், கோவையைச் சேர்ந்த ரசிகர்கள் ஒஒருவர் உண்மையான ஜல்லிக்கட்டு காளை ஒன்றை அலங்கரித்து தியேட்டருக்கு அழைத்து வந்தனர்.

கோவை நூறடி சாலையில் உள்ள திரையரங்கில் வடம் பட வெளியீட்டை மேள தாளம் முழங்க திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடினர்.

இதனிடையே படம் வெளியாகி உள்ள தி்ரையரங்க வளாகத்திற்கு ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த ரசிகர்கள் அந்தக் காளைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.நடிகர் விமலுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு ஆக்ஷன் கலந்த எதார்த்தமான படம் வெளிவந்துள்ளது. ஜல்லிக்கட்டின் ஒரு வகையான ‘வடமாடு’ விளையாட்டைப் போற்றும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால், ரசிகர்கள் காளையுடன் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில் ராஜசேகர்,வெங்கடேஷ்வரன் மற்றும் பிரபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவம் மற்றும் கிராமிய வீர விளையாட்டுகளைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Continue Reading

Entertainment

காதல், ஆக்ஷன், நிறைந்த கிறிஸ்துமஸ் ‘ரெட்ட தல’ – நடிகர் அருண் விஜய்

Published

on

பீ.டி.ஜி. யுனிவர்சல் நிறுவனம், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் ‘ரெட்ட தல’ திரைப்படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை கோவையில் நடைபெற்றது.

நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இட்னானி (வெந்து தணிந்தது காடு கதாநாயகி) மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய நடிகர் அருண் விஜய், “இது ஒரு நீண்ட விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் காலத்தில் வெளிவருகிறது. எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த படம் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

திரை ரசிகர்களுடன் எளிதில் கனெக்ட் ஆகும் ஒரு கதையாக இதை இயக்குனர் திருக்குமரன் உருவாக்கியுள்ளார் எனவும், தனது வலிமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதையாக இது தனக்கு கிடைத்துள்ளது எனவும் கூறினார்.

இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், அதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும், இருவருக்கும் சில வேறுபாடுகள் இருப்பதையும் காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாக கூறினார்.

அடிப்படையில் இந்த படம் காதலை மையமாகக் கொண்ட ஒரு படம் எனக் கூறிய அவர், “இதில் ஆசைக்கும் பேராசைக்கும் இடையே ஒரு சிறு கோடு உள்ளது. அந்த கோட்டை கடந்து சென்றால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், அதனால் ஏற்படும் சவால்கள் – இதை ஒரு மனிதன் எப்படி கடந்து செல்கிறான் என்பதை இந்த கதை காட்டும்,” என்றார்.
கதைக்கு எங்கெங்கே தேவையோ அங்கங்கே ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நிறைய ட்விஸ்ட்களும் எதிர்பாராத இடத்தில் திருப்பங்களும் இருக்கும். கண்டிப்பாக பார்வையாளர்களை இந்த படம் தனது கைக்குள் வைத்திருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ஸின் இசை இந்த படத்தை மேலும் ஒரு கட்டத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறிய அவர், இப்படத்தில் நடிகர் தனுஷ் ‘கண்ணம்மா’ எனும் பாடலை பாடியிருக்கிறார் என்று கூறினார்.

Continue Reading

Trending