Connect with us

சினிமா

ஒருவேளை… இடைவெளி விட்ட தளபதி அதிர்ந்த அரங்கம்!

Published

on

அரசியலையும், சினிமாவையும் பிரித்து பார்ப்பது இயலாத காரியம். அரசியலில் இருப்பவர்கள் சினிமாவில் நடிப்பதும், சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதுதான். எம்.ஜி.ஆர் சிவாஜி கருணாநிதி, ஜெயலலிதா இன்னும் பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.இவர்களை அடுத்து யார் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவார்கள் என்ற திர்பார்ப்பு தொடர்கிறது. விஜய் வருவார் என பலராலும் பேசப்பட்டாலும் அது பேச்சாகவே இருந்து வருகிறது இந்த நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பபரிசு வழங்கும் நிகழ்ச்சி நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் மாணவர்களுக்கு பொதுவான அறிவுரைகளும், அரசியல் அறிவுரைகளும் சொல்லி அரங்கை அதிரச் செய்தார்.

என் நெஞ்சில் குடியிருக்கும், இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம். நான் நிறைய ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு எதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல் உணர்கிறேன்.நான் நடிகன் ஆகவில்லை என்றால் டாக்ட ஆகியிருப்பேன் என்று கூற விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் போய் கொண்டிருந்தது.

நான் நடிகன் ஆகவில்லை என்றால் டாக்ட ஆகியிருப்பேன் என்று கூற விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் போய் கொண்டிருந்தது. ஒருவேளை… என்று தனது பேச்சை விஜய் நிறுத்தியதும் அரங்கம் அதிரும் அளவுக்கு சத்தம் விண்ணை முட்டியது ….அத விடுங்க …. அதன் ஏன் இங்க பேசிட்டு…. என பன்ச் வைத்து நிறுத்தினர். மீண்டும் தனது உரையை துவங்கிய விஜய் ” இந்த விழா நடத்துவதற்கான காரணம் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் உன்னிடம் இருந்து சொத்து, நிலத்தை எடுத்துக் கொள்ளலாம். கல்வியை உன்னிடம் இருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது என்று சொன்னார்.

ஓட்டுக்கு பணம் வேண்டாம்

முடிந்தவரை படியுங்கள் எல்லோரையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எல்லா தலைவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள். நாளைய வாக்காளர்கள் நீங்கள் அடுத்தடுத்து நீங்கள் புதிய வருங்கால தலைவர்களை தேர்தெடுப்பவர்கள் நீங்கள் தான். நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது தான் நாமும் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது.

உதாரணமாக ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள் ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் 15 கோடி ரூபாய் ஆகிறது. ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள். இதெல்லாம் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள். இது நடக்கும் போது தான் உங்கள் கல்வி முறை முழுமை அடைந்ததாக எடுத்துக் கொள்ளலாம் என கூறினார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சினிமா

ரஷ்மிகா – விஜய் தேவரகொண்டா இணைந்து உருவாக்கிய கலாச்சார திருமண திருவிழா!

Published

on

2 மார்ச் 2026, நேஷ்னல்: இந்தியாவின் மிகச்சிறந்த திருமண ஃபேஷன் பிராண்டான மான்யவர் மோஹே (Manyavar Mohey), தனது புதிய விளம்பரமான ‘மேட் ஃபார் ஈச் அதர்’ (Made For Each Other)-க்காக ரஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா ஆகியாரை பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்துள்ளது. இது வெறும் விளம்பரம் மட்டுமல்ல; இது அதிக ஆற்றல் கொண்ட, ஃபேஷன் கலந்த ஒரு இசைச் சித்திரம். ‘விரோஷ்’ இரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ஒரு விஷயத்தை இது வழங்குகிறது – இந்த ஜோடியின் இரசிக்கத்தக்க கிண்டல்களையும், மறுக்க முடியாத கெமிஸ்ட்ரியையும் முன் எப்போதும் கண்டிராத வகையில் இது படம்பிடித்து, இறுதியில் அவர்களின் ‘மேட் ஃபார் ஈச் அதர்’ தருணத்திற்கு அழைத்துச் செல்கிறது.

ஸ்டைலான, ஒரே மாதிரியான உடைகளை அணியும் திட்டத்துடன் தொடங்கும் இந்தக் காட்சி, உடனடியாக ஒரு காவியமான பாடல் மோதலாக மாறுகிறது. ரஷ்மிகா முதல் கிண்டலைத் தொடங்க, விளையாட்டுத்தனமான ‘நோக்-ஜோக்’ (சிறு சண்டைகள்) வெடிக்கிறது. “ட்வின்னிங் செய்யத் தான் பிளான் செய்தோம், நீ என்ன உடை அணிந்திருக்கிறாய்?” என்று அவர் கேட்க, அதற்கு விஜய் சமமான வசீகரத்துடன், உன் ஹீரோவின் ஸ்டைல் பிரமாதமாக இருக்கிறது அல்லவா?” என்று பதிலளிக்கிறார்.

இந்தக் கிண்டல்கள் விளையாட்டுத்தனமாக அதிகரித்து, இறுதியில் ஒரு அதிரடியான அறிவிப்பில் முடிகிறது: “இதை நிறுத்துவோம்! நாம் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள் இல்லை (NOT Made for Each Other)”. ஒரு ரொமாண்டிக்-காமெடி பாணியில் ‘இவர்கள் இணைவார்களா மாட்டார்களா’ என்ற பதற்றத்தில் இரசிகர்கள் இருக்கும்போது, இசை மென்மையாகிறது அத்துடன் கதை நெகிழ்ச்சியான ஒன்றாக மாறுகிறது.

விளையாட்டுத்தனமான சீண்டல்களிலிருந்து இதயப்பூர்வமான உரையாடலுக்கு மாறும் அந்தத் தருணம், விஜய்யும் ரஷ்மிகாவும் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதுடன், அதே வேறுபாடுகள் எப்படி அவர்களின் பிணைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன என்பதை வெளிப்படுத்தும் விதமாக அழகாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. உண்மையான பந்தம் வேறுபாடுகள் இருந்தபோதிலும் நிலைத்திருப்பதல்ல, மாறாக அந்த வேறுபாடுகளாலேயே செழித்து வளர்கிறது என்பதற்கு இது ஒரு அழுத்தமான சான்றாகும்.

இந்த விளம்பரப்படம் ஒரு மூச்சடைக்கக்கூடிய காட்சி விருந்துடன் நிறைவடைகிறது. இதில் விஜய் ஒரு நேர்த்தியான மான்யவர் இண்டோ-வெஸ்டர்ன் உடையில் காட்சியளிக்க, ரஷ்மிகா ஒரு கண்கவர் மோஹே லெஹங்காவில் (Mohey lehenga) ஜொலிக்கிறார். இது இந்த விளம்பரத்தின் மையக் கருத்தான – ‘மான்யவர் மோஹே. மேட் ஃபார் ஈச் அதர்’ (Manyavar Mohey. Made For Each Other) என்பதை மிகச் சரியாகப் பிரதிபலிக்கிறது.

வேதாந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய் பிரிவு முதன்மை அதிகாரி வேதாந்த் மோடி அவர்கள் இந்த விளப்பரப்படத்தின் நோக்கம் குறித்து விரிவாகக் கூறியதாவது, மான்யவர் மோஹே-வில், நாங்கள் திருமணங்களுக்கான டைகளை மட்டும் வடிவமைப்பதில்லை; அந்தத் திருமணங்களை அடையாளப்படுத்தும் நினைவுகளின் ஒரு அங்கமாகவே மாறுகிறோம். எங்களின் நுணுக்கமான கைவினைத்திறனைப் போலவே நிலைத்திருக்கும் நினைவுகளை உருவாக்குவதும், வாழ்வின் முக்கியமான தருணங்களில் தவிர்க்க முடியாத பங்காக இருப்பதும் தான் எங்களின் சாராம்சம். நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஆடையும், இரண்டு தனித்துவமான ஆளுமைகள் ஒன்றாக இணைவதைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. இந்த விளம்பரம் அந்த உணர்வைப் பிரதிபலிக்கிறது. ரஷ்மிகா, விஜய் ஆகியோர், தங்களின் இயல்பான வசீகரம் மற்றும் அனைவராலும் எளிதில் அணுகக்கூடிய தன்மையால், இந்த இசை கலந்த கதையை உயிர்ப்பிக்க சரியான தேர்வாக அமைந்தனர். இந்த விளம்பரத்தின் மூலம், நவீனமாகவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியாவின் கொண்டாட்ட கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய விதத்திலும் திருமண ஆடைகளை நாங்கள் முன்வைக்கிறோம். மான்யவர் மோஹே-வுடன் இணையும் ஒவ்வொரு ஜோடியும் உண்மையிலேயே ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள்‘ (Made for Each Other) என்ற எங்கள் நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”

தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட விஜய் தேவரகொண்டா அவர்கள் கூறியதாவது, “மான்யவர் மோஹே எப்போதும் அன்றாடத் தருணங்களின் மூலம் வலுவடையும் பந்தங்களைக் கொண்டாடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது, அதைத்தான் இந்த விளம்பரமும் பிரதிபலிக்கிறது. மேட் ஃபார் ஈச் அதர்‘, ஒவ்வொரு உறவிலும் இருக்கும் வேடிக்கையான கருத்து வேறுபாடுகள், சொல்லப்படாத பிணைப்பு, ஒன்றாக இருப்பதில் உள்ள நிம்மதி ஆகியவற்றை இசையின் மூலம் வெளிப்படுத்துகிறது. பாரம்பரியத்தில் வேரூன்றி இருந்தபோதிலும், இந்த டைகள் எவ்வளவு நவீனமாகவும், வசதியாகவும், இயல்பான ஸ்டைலுடனும் இருக்கின்றன என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்துள்ளது.”

ரஷ்மிகா மந்தனா அவர்கள் கூறுகையில், “உணர்ச்சிகள் மற்றும் கதை சொல்லல் மூலம் திருமணங்களைக் கொண்டாடும் ஒரு அழகான முறையை மான்யவர் மோஹே கொண்டுள்ளது, அதுவே இந்த பிராண்ட் உடனான இணைப்பை எனக்கு சிறப்பானதாக ஆக்கியது. இந்த டைகள் நேர்த்தியாகவும், பேஷனாகவும் இருப்பது மட்டுமல்லாமல், வியக்கத்தக்க கைவினைத்திறனையும், நுணுக்கமான விவரங்களையும் வெளிப்படுத்துகின்றன” என்று குறிப்பிட்டார்.

இந்த இசை விளம்பரப்படம், ஒவ்வொரு காதல் கதையையும் ‘மேட் ஃபார் ஈச் அதர்’ என்று மாற்றும் தனித்துவமான பிணைப்புகளையும் சிறப்புத் தருணங்களையும் கொண்டாடுமாறு அனைவரையும் அழைக்கிறது.

இந்தப் புதிய தொலைக்காட்சி விளம்பரம், தொலைக்காட்சி, டிஜிட்டல், அச்சு ஊடகம், சினிமா, வெளிப்புற விளம்பரங்கள், சமூக ஊடகங்கள், மூலோபாய மக்கள் தொடர்பு என அனைத்துத் தளங்களிலும் 360 டிகிரி விளம்பரமாக விரிவுபடுத்தப்படும்.

Continue Reading

Entertainment

காதல், ஆக்ஷன், நிறைந்த கிறிஸ்துமஸ் ‘ரெட்ட தல’ – நடிகர் அருண் விஜய்

Published

on

பீ.டி.ஜி. யுனிவர்சல் நிறுவனம், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் ‘ரெட்ட தல’ திரைப்படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை கோவையில் நடைபெற்றது.

நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இட்னானி (வெந்து தணிந்தது காடு கதாநாயகி) மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய நடிகர் அருண் விஜய், “இது ஒரு நீண்ட விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் காலத்தில் வெளிவருகிறது. எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த படம் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

திரை ரசிகர்களுடன் எளிதில் கனெக்ட் ஆகும் ஒரு கதையாக இதை இயக்குனர் திருக்குமரன் உருவாக்கியுள்ளார் எனவும், தனது வலிமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதையாக இது தனக்கு கிடைத்துள்ளது எனவும் கூறினார்.

இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், அதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும், இருவருக்கும் சில வேறுபாடுகள் இருப்பதையும் காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாக கூறினார்.

அடிப்படையில் இந்த படம் காதலை மையமாகக் கொண்ட ஒரு படம் எனக் கூறிய அவர், “இதில் ஆசைக்கும் பேராசைக்கும் இடையே ஒரு சிறு கோடு உள்ளது. அந்த கோட்டை கடந்து சென்றால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், அதனால் ஏற்படும் சவால்கள் – இதை ஒரு மனிதன் எப்படி கடந்து செல்கிறான் என்பதை இந்த கதை காட்டும்,” என்றார்.
கதைக்கு எங்கெங்கே தேவையோ அங்கங்கே ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நிறைய ட்விஸ்ட்களும் எதிர்பாராத இடத்தில் திருப்பங்களும் இருக்கும். கண்டிப்பாக பார்வையாளர்களை இந்த படம் தனது கைக்குள் வைத்திருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ஸின் இசை இந்த படத்தை மேலும் ஒரு கட்டத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறிய அவர், இப்படத்தில் நடிகர் தனுஷ் ‘கண்ணம்மா’ எனும் பாடலை பாடியிருக்கிறார் என்று கூறினார்.

Continue Reading

Entertainment

ரஜினிகாந்தின் 173வது ரஜினிகாந்த், கமலுடன் இணையும் சுந்தர்.சி!

Published

on

ரஜினிகாந்தின் 173வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிக்க இருக்கிறது பிரபல இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தை இயக்குகிறார். 2027 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினிகாந்தின் 173வது படம் தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading

Trending