Connect with us

அரசியல்

அறிவுத் திருவிழாவா? திட்டும் திருவிழாவா? தவேக தலைவர் விஜய்

Published

on

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-

சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது. அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?

ஆம். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர். உண்மையில் நாம், அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம். நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்கிற அதிகார மயக்க முழக்கம்.

தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர். போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?

யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்? ஆட்சியில் இல்லாதபோது ‘தமிழ் தமிழ்’ என்பதும், ‘தமிழர் தமிழர்’ என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்? சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?

அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது? பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?

3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா? பவளவிழா பாப்பா – நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா. நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.

எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அரசியல்

தளபதி முருகேசன் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம்

Published

on

சட்டசபை தேர்தலை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் கட்சியான திமுக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி மாவட்டம் முழுவதும் நடத்திவருகிறது . கடந்த 10ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வு 20ஆம் தேதி கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதி சூலூர் மேற்கு ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி 98,99 ஆகிய பாகங்களில் நடைபெற்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது இதில் திமுக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சூலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலலிதா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் வைஸ் கந்தசாமி, ஒன்றிய இளைஞரணி நவீன், தனபால், பிரவீன், கிளைச் செயலாளர் சண்முகம், கருப்புசாமி, முருகேஷ்,BLA2 துரை (எ) சதாசிவம், மனோஜ், பாக நிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதேபோல 18ஆம் தேதி கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி செட்டிபாளையம் பேரூராட்சி பாகம் எண் 177, சூலூர் சட்டமன்றத் தொகுதி சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியம் இடையர்பாளையம் ஊராட்சி பாகம் எண் 269 ஆகிய பாகங்களில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்திலும் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

Continue Reading

அரசியல்

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்

Published

on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? வெல்லட்டும் திராவிடம் வீழட்டும் பாசிசம் என்கிற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் கடந்த 14ஆம் தேதி மீனாட்சி மஹால், மகாலிங்கபுரம் ரவுண்டானா, பொள்ளாச்சியில் திமுக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே வி கே எஸ் சபரி கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். மூத்த ஊடகவியலாளர் தி.செந்தில் வேல், திராவிடக் கழக துணை பொது செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பொள்ளாச்சி நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சு.ஈஸ்வரன் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் மயூரா சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொள்ளாச்சி தெற்கு நகர செயலாளர் அமுத பாரதி, பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Continue Reading

அரசியல்

நான் எந்த பதவியில் இருந்தாலும் உங்கள் சகோதரன் – நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி பேச்சு

Published

on

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பூத் கைமுட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கோவை பேரூர் செட்டிபாளையம் அருகே நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக கழக தலைமை நிலையச் செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் பேசிய வேலுமணி : நான் எந்த பதவியில் இருந்தாலும் உங்கள் சகோதரன் பொன்விழா கண்ட இயக்கம், 31 ஆண்டுகள் ஆளும்கட்சி அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் இருப்பதே பெருமை .தமிழ்நாட்டில் அதிகமான திட்டங்களை தந்தது அதிமுக தான் , காவேரி நீர் பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை உள்பட தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். மத்திய அரசிடம் இருந்து ஏராளமான திட்டங்களைப் பெற்றுத்துள்ளோம்.  கோவை நகரின் போக்குவரத்து நெரிசல், தொழில் வளர்ச்சி, மக்களின் பயண வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் அப்போது , கோவைக்கு மெட்ரோ திட்டம் உறுதியாக கொண்டு வரப்படும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு, திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளும் பெற்று, பணிகள் விரைவாக தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் , கோவைக்கு அதிமுக அரசு நிறைய வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளது மிக முக்கியமான சாலைகளை விரிவுபடுத்தி விபத்துகளை தடுத்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து உயிரை காப்பாற்றியுள்ளோம். விரைவில் சட்டசபை தேர்தல் வர இருக்கின்றது. அதில் 210 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் எனக் கூறினார்.

இக்கூட்டத்தில் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், பேரூராட்சி செயலாளர்கள், , மற்றும் வட்ட கழக செயலாளர்கள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

Trending