Connect with us

கோயம்பத்தூர்

10 ஆண்டுகால, ஆராய்ச்சியின் பலனாய் ‘தமிழ் வழி ஜப்பான் மொழி’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன்.- கருணாநிதி காசிநாதன்

Published

on

இந்தியாவிற்கும், ஜப்பானிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. ஜப்பானிய மொழியும், தமிழ் மொழியும் ஒரே வேரிலிருந்து துளிர்விட்ட மரங்களைப் போலவே வளர்ந்து நிற்கிறது.
தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கமும், ஜப்பானியர்களின் உணவு பழக்க வழக்கமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஜப்பானியர்களும், தமிழர்களைப் போலவே அரிசி உணவுகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற ஒற்றுமைகள் தான், ஜப்பானிய மொழி பயின்று ஜப்பானிய கலாசாரம், பாரம்பரியத்தை பற்றி ஆராய தூண்டியது. ” என தனது முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், கருணாநிதி காசிநாதன்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிறந்த இவர், மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டமும், கணினி அறிவியலில் முதுகலை பட்டமும் முடித்திருக்கிறார். பல உலக நாடுகளில், பல்வேறு பணிகளுக்காக பயணித்தவர், ஜப்பானிலும் 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அங்கு இருந்த காலங்களில் ஜப்பானிய மொழி பயின்று, ஜப்பானிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விஷயங்களை அறிந்து கொண்டார்.
” எனக்கு மற்ற உலக நாடுகளை விட ஜப்பான் ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில் அந்நாட்டின் தொழில்நுட்பம் முன்னேற்றம், சுய ஒழுக்கம், சமூக ஒழுக்கம், தரம் மற்றும் பணியாற்றும் பண்புகள் பாராட்டக் கூடியதாக மொழியிலும் இருந்தன. அதனால் ஜப்பானிய பாரம்பரியத்தை ஆழமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஜப்பானிய மொழியை பயின்ற போது எனக்கு மற்றொரு ஆச்சரியம் காத்திருந்தது. அ இ உ ஏ ஐ. . ஆகிய உயிரெழுத்துக்களின் குறில் உச்சரிப்பை போலவே ஜப்பானிய மொழியிலும் இதே போன்ற அடிப்படை இருப்பதைஉணர்ந்தேன்.

அதே சமயம் இலக்கணமும், வாக்கிய அமைப்பும் தமிழோடு நெருக்கமாக இருந்தன. அதனால் ஆங்கில வழி ஜப்பானிய மொழி பயில்வதைவிட, தமிழ் மொழி வாயிலாக ஜப்பானிய மொழி பயில்வது எளிது என்பதை உணர்ந்து அது தொடர்பான ஆய்வுகளையும், கட்டுரைகளையும் தயாரித்தேன். 10 ஆண்டுகால, ஆராய்ச்சியின் பலனாய் ‘தமிழ் வழி ஜப்பான் மொழி’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன். தமிழ் பேசும் மாணவர்கள் எளிதாக தமிழ் மொழியிலேயே ஜப்பானிய மொழியை புரிந்து கொள்ளவும், ஜப்பானிய மொழி பயிலவும் இந்த புத்தகம் ஏதுவாக இருக்கும்.” என்பவர், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கல்வி, கலாச்சாரம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் வலுவான இணைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்றி வருகிறார்.

தமிழ் வழியில் ஜப்பானிய மொழி பயிலும் நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பதுடன், ஜப்பான் நாட்டில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகள், கல்வி வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
” ஜப்பானிய மொழி அறிவுடன், கல்வி அறிவும் இருந்தால் ஜப்பான் நாட்டில் நிறைய வேலை வாய்ப்புகள் பெறலாம். ஏனெனில் ஜப்பான் நாட்டில், இளைஞர்களை விட முதியவர்கள் அதிகம் என்பதால், அங்கு இளைஞர்களுக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது. ஆங்கிலம் பரவலாக பேசப்பட்டாலும், பெரும்பாலான ஜப்பானிய நிறுவனங்களில் ஜப்பானிய மொழியை முதன்மையானதாக கருதப்படுகிறது. பொறியியல் பட்டம் முடித்தவர்கள், கலை அறிவியல் படித்தவர்கள், ஏன் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்களுக்கு கூட வேலை வாய்ப்புகள் அங்கு நிறைய உள்ளன. பொறியியல் சுகாதாரம் முதியோர் பராமரிப்பு விவசாயம் வாகன உற்பத்தி தொழில்துறை என… 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இவை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள தமிழர்கள், ஜப்பானிய மொழியை பயின்றால் மட்டுமே போதும் என்பதுதான் கூடுதல் சிறப்பு” என உற்சாகமாக பேசுபவர், நிறைய தமிழர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். பொறியியல் படித்தவர்களுக்கு மட்டுமல்ல விவசாயம் பயின்றவர்களுக்கும் ஜப்பானில் விவசாய பண்ணைகளில் பணி வாய்ப்புகளை உண்டாக்கி கொடுத்திருக்கிறார்.

” ஜப்பான் பணியாற்றுவதற்கு மட்டுமல்ல படிப்பதற்கும் சிறந்த இடம். ஜப்பான் தற்போது வெளிநாட்டு மாணவர்களுக்கும், திருந்த மனப்பான்மையுடன் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற (coe) எனப்படும் விசா முறையை பயன்படுத்தலாம். இளங்கலை பயிலும் ஆசையோடு ஜப்பான் வருபவர்கள் கட்டாயம் ஜப்பானிய மொழி கற்று இருக்க வேண்டும் அதுவே முதுகலை பட்டமும் ஆராய்ச்சி படிப்பும் மேற்கொள்ள ஜப்பான் வருபவர்களுக்கு ஜப்பானிய மொழி ஒரு தடையாக இருப்பதில்லை ஏனெனில் இங்கிருக்கும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ஆங்கில மொழியிலேயே முதுகலை கல்வி படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. அதனால் மொழி ஒரு தடையாக இல்லாமல் போய் உள்ளது இந்த வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது உலகளாவிய திறமைகளை வளர்த்துக்கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பமாக அமையும்.” என்பவர், கல்வி திறன் மேம்பாடு விவசாயம் வேலைவாய்ப்பு கலாச்சார பரிமாற்றம் போன்ற துறைகளில் இந்திய ஜப்பான் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறார் இவரது முயற்சிகளால் பல மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஜப்பானில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

“ஜப்பான் நாட்டிற்கு பழங்களையும் உணவுகளையும் ஏற்றுமதி செய்வதும் நல்ல முயற்சி தான். ஆனால் ஜப்பானியர்கள் தரத்தில் எந்த சமரசமும் செய்வதில்லை. ஏற்றுமதி தொழிலில் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். கடுமையான சோதனைகள் இருக்கும். இதற்கெல்லாம் தயாராக இருப்பவர்கள் நிச்சயம் ஜப்பான் நாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.” என ஜப்பான் பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் காசிநாதன், ‘கே.சி.சி.எஸ். இண்டோ ஜப்பான்’ என்கிற இன்ஸ்டால் பக்கத்தின் வாயிலாக ஜப்பான் பற்றிய பல்வேறு தகவல்களையும் பல்வேறு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்பு சம்பந்தமான தகவல்களையும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் தமிழ் வழியில் ஜப்பான் மொழி கற்பிக்கும் முயற்சிகளும், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.ஜப்பான் மொழி குறித்த ஆராய்ச்சிக்கும், இவரது சேவைகளுக்கும் பல்வேறு சர்வதேச விருதுகளும் கிடைத்து இருக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

கனவை நினைவாக்க சிறப்புத் தள்ளுபடி

Published

on

CASTLE REALTY வழங்கும் “CASTLE GRANDE” பிரீமியம் வில்லாஸ் & ப்ளாட்ஸ் திட்டத்தின் திறப்பு விழா சலுகையாக ரூ.1லட்சம் வரை தள்ளுபடி.

கோவையின் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான வடமதுரை – மேட்டுப்பாளையம் சாலையில், CASTLE REALTY நிறுவனத்தின் புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான “CASTLE GRANDE”-ன் பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெற்றது.

நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள CASTLE GRANDE திட்டம், உயர்தர வில்லாக்கள் மற்றும் குடியிருப்பு ப்ளாட்களை உள்ளடக்கிய பிரீமியம் சமூக வாழ்வை வழங்குகிறது. இயற்கை சூழல், பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து குடும்பங்களின் கனவு இல்லத்தை நனவாக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து CASTLE ரியால்ட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சின்னசாமி கூறுகையில்,

“நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு திட்டமும் தரம், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. CASTLE REALITY , சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், நீண்டகால முதலீட்டு வளர்ச்சியையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கோயம்புத்தூரின் வளர்ச்சி பாதையில் முக்கிய இடத்தைப் பெறும் என்று நம்புகிறோம்.” என்றார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

-பிரீமியம் வில்லாஸ் & ப்ளாட்ஸ்
-24×7 பாதுகாப்பு வசதி
-CCTV கண்காணிப்பு
-விநாயகர் கோவில்
-சோலார் மின்வேலி பாதுகாப்பு
*பசுமை நிறைந்த சுற்றுச்சூழல்
-உயர்தர நுழைவாயில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள்
இந்த திறப்பு விழாவையொட்டி வருகை தரும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் அனைவருக்கும் Fun Zone Kids Games, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் மதிய உணவு (Lunch) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களது எதிர்கால கனவு இல்லத்திற்கான சிறந்த முதலீட்டு வாய்ப்பை அறிந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு CASTLE REALTY நிறுவனம அழைப்பதாக தெரிவித்தார். மேலும் திறப்பு விழா சலுகையாக ரூ.1லட்சம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் ஹோம்ஸ் டூ லைஃப் இரண்டாவது கிளை துவக்கம்

Published

on

திருச்சி சாலையில் துவங்கப்பட்டுள்ள புதிய ஷோரூமில் பிரீமியம் ரக ஃபர்னிச்சர்கள் , சிக்னேச்சர் கலெக்ஷன்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை

 

சர்வதேச அளவில் பிரீமியம் ஃபர்னிச்சர்கள் விற்பனையில் முன்னனி நிறுவனமான HomesToLife) ஹோம்ஸ் டூ லைஃப் தனது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலையில் துவங்கி உள்ளது..

நீண்ட அனுபவம்வாய்ந்த மற்றும் பல முன்னணி பிராண்டுகளை கையாளும் ‘(Homes Zone’) ஹோம் சோன் நிறுவனத்துடன் இணைந்து துவங்கப்பட்ட,இந்த ஷோரூமில் வீட்டிற்கான சோபா செட்கள், டைனிங் டேபிள்கள், படுக்கையறை மரச்சாமான்கள், அலுவலக ஃபர்னிச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்தர தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட பொருட்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட முறையிலும் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், HomesToLife India’-வின் நாட்டுத் தலைவர் (Country Head) வருண் காந்த் மற்றும் கிளை உரிமையாளர் ராஜ் மாரப்பன் ஆகியோர் கூறுகையில்,“தரமான தயாரிப்புகள், நவீன வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம். ஒரே இடத்தில் அனைத்து வகையான பிரீமியம் ஃபர்னிச்சர் தீர்வுகளையும் வழங்கும் மையமாக இந்த ஷோரூம் செயல்படும்” என்றனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

காந்திமா நகர் ஓடை புனரமைப்பு பணி தொடக்கம்

Published

on

கோயம்புத்தூர் | 21 ஜூன் 2026

2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறுத்துளி, கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

கோயம்புத்தூரின் முக்கிய நகர்ப்புற நீர்வழித்தடங்களில் ஒன்றான காந்திமா நகர் ஓடை (குறும்பப் பள்ளம்), காந்திமா நகர் காவல் நிலையம் அருகே தோன்றி, பன் மால், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 13.5 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து இறுதியில் இருகூர் ஏரியில் கலக்கிறது. நகரின் மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் இந்த ஓடை முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பு, திடக்கழிவுகள் கொட்டப்படுதல், ஆக்கிரமிப்பு தாவரங்கள் வளர்ச்சி மற்றும் ஓடையின் கரைகள் சேதமடைதல் போன்ற காரணங்களால், துர்நாற்றம், நீரின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கீழ்மட்ட நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி (CCMC), பி.எஸ்.ஜி. குழுமம் மற்றும் சிறுத்துளி இணைந்து ஓடையை புனரமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. முதல் கட்டமாக 3.5 கிலோமீட்டர் நீளப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் திடக்கழிவுகள் மற்றும் வண்டல் அகற்றுதல், கரைகளை வலுப்படுத்த இயற்கை மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுதல், இயற்கை சார்ந்த நீர் சுத்திகரிப்பு முறைகள் அமைத்தல் மற்றும் நீர்தரத்தை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டம் மூலம் நீரின் தரம் மேம்படுதல், துர்நாற்றம் குறைதல், திடக்கழிவு கொட்டுதல் தடுக்கப்படுதல் மற்றும் நகரின் பசுமை வளம் அதிகரித்தல் உள்ளிட்ட நீண்டகால சுற்றுச்சூழல் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புனரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக “உங்கள் கழிவைக் கவனியுங்கள்” (Watch Your Waste) என்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (21.06.2026) ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் நடைபெற்றது.

ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் திடக்கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். நீர்மாசுபாட்டால் ஏற்படும் நீர்தரக் குறைவு, துர்நாற்றம், நீர்வாழ் உயிரினங்களின் பாதிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், கழிவுகளை பொறுப்புடன் அகற்றுதல் மற்றும் நகர்ப்புற நீர்வழித்தடங்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். கிரி பிரசாத், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., பி.எஸ்.ஜி. சன்ஸ் & சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபாலகிருஷ்ணன், சிறுத்துளி நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், சிறுத்துளி அறங்காவலர்கள், ஸ்டீயரிங் கமிட்டி மற்றும் அபெக்ஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஓடை சுத்தம் செய்யும் பணியிலும் பங்கேற்றனர்.

காந்திமா நகர் ஓடையை பாதுகாப்பது என்பது ஒரு ஓடை சீரமைப்புத் திட்டம் மட்டுமல்ல; கோயம்புத்தூரின் நீர்வளத்தை பாதுகாத்து, நிலையான சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு வழங்கும் ஒரு மக்கள் இயக்கமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய சிறுத்துளி நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், நகரின் ஓடைகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

Continue Reading

Trending