Connect with us

கோயம்பத்தூர்

கோயம்புத்தூர் விழாவின் 18வது பதிப்பு கோலாகலமாக துவக்கியது!

Published

on

*கோவை எம்.பி., மாவட்ட கலெக்டர், மாநகராட்சி & காவல் ஆணையர்கள் துவக்கி வைத்தனர்*

*150க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நவம்பர் 14 முதல் 24 வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது*

கோவை , அக்டோபர் 31, 2025

கோவை மாநகரின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முக சமூக உணர்வுகளைக் கொண்டாடும் விதமாக, கடந்த 17 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், கோயம்புத்தூர் மக்களும் இணைந்து கோயம்புத்தூர் விழா எனும் பிரம்மாண்ட திருவிழாவை நடத்திவருகின்றனர்.

இன்று (31.10.25) கோயம்புத்தூர் விழாவின் 18வது பதிப்பு, ‘இன்ஃபினிட்டி எடிஷன்’ என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஐ.ஏ.எஸ், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் ஐ.பி.எஸ். ஆகியோர் விழாவைத் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வு ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் நடைபெற்றது. கோவை விழா 2025 இன் தலைவர் சண்முகம் பழனியப்பன், யங் இந்தியன்ஸ் – கோவை அமைப்பின் தலைவர் நீல் கிக்கானி மற்றும் பல்வேறு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து கோயம்புத்தூர் விழா 2025ன் தலைவர் சண்முகம் பழனியப்பன் கூறுகையில் :-

இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழாவின் 18வது ஆண்டாக உள்ளது. இதில் 8 எனும் எண் முடிவில்லா தன்மையை குறிக்கும் இன்ஃபினிட்டி வடிவத்தை போல உள்ளதால், கோவையின் முடிவில்லா ஆற்றலை கொண்டாடுவோம் என்பதை குறிக்கும் நோக்கில் இந்த பதிப்பு ‘இன்ஃபினிட்டி எடிஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த விழா நவம்பர் 14 முதல் நவம்பர் 24, 2025 வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது. சுமார் 150க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு, நகரம் முழுவதையும் ஒன்றிணைக்கும் பொதுவான கருத்தை இவை கொண்டு செல்லும் என்று அவர் கூறினார்.

இந்த விழாவில் இடம்பெறும் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ‘ஸ்கை டான்ஸ்’ (Sky Dance) கவனத்தை பெறக்கூடியதாக உள்ளது. இது லேசர் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் கோயம்புத்தூரின் வரலாறு மற்றும் நகரின் வளர்ச்சிப் பயணத்தை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி நவம்பர் 14 முதல் 24 வரை தினமும் மாலை 6.30 மணி முதல் கொடிசியா வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது.

விழாவின் மற்றும் பல முக்கிய நிகழ்வுகளாக – ஓவிய வீதி (Art Street), கோவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா (Coimbatore Science and Technology Fest), பாரா விளையாட்டு மற்றும் சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் (Para Sports and Special Sports), கோயம்புத்தூரின் திறமையை வெளிப்படுத்தும் ‘கோயம்புத்தூர்ஸ் காட் டாலண்ட்’ (Coimbatore’s Got Talent), கோவை விழா மாரத்தான், இசை மழை, தி பிட்ச் (The Pitch), பேரணி (Rally for Resilience), விழா வீதி (Vizha Veedhi), வைப்ஸ் ஆப் செட்டிநாடு (Vibes of Chettinad) இடம்பெறுகின்றன.

கோவை வேக விழா எனும் தலைப்பில் கோ-கார்ட் பந்தயம், ஆட்டோகிராஸ் சாம்பியன்ஷிப், கார் மற்றும் பைக் சாகச நிகழ்ச்சி (Car and Bike Stunt Show), மோட்டார் பைக் பேரணி (Motorbike Rally) நடக்கவுள்ளது.

பாரம்பரிய விழா (Parampariya Vizha), பட்டிமன்றம், வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கண்காட்சி, பிக்கில்பால் போட்டி (PickleFest), பேரன்பு எனும் மூத்த குடிமக்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி, க்ரீன் அப் அண்ட் க்ளோ அப் கோவை (Green Up & Glow Up Coimbatore) எனும் தூய்மைப்பணி முயற்சி, மின் கழிவு சேகரிப்பு முயற்சி மற்றும் ரூப்பே ரெடி (Ruppe Ready) குழந்தைகளுக்கான நிதி மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்வு போன்ற பல நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன என அவர் பகிர்ந்துகொண்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

கனவை நினைவாக்க சிறப்புத் தள்ளுபடி

Published

on

CASTLE REALTY வழங்கும் “CASTLE GRANDE” பிரீமியம் வில்லாஸ் & ப்ளாட்ஸ் திட்டத்தின் திறப்பு விழா சலுகையாக ரூ.1லட்சம் வரை தள்ளுபடி.

கோவையின் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான வடமதுரை – மேட்டுப்பாளையம் சாலையில், CASTLE REALTY நிறுவனத்தின் புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான “CASTLE GRANDE”-ன் பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெற்றது.

நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள CASTLE GRANDE திட்டம், உயர்தர வில்லாக்கள் மற்றும் குடியிருப்பு ப்ளாட்களை உள்ளடக்கிய பிரீமியம் சமூக வாழ்வை வழங்குகிறது. இயற்கை சூழல், பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து குடும்பங்களின் கனவு இல்லத்தை நனவாக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து CASTLE ரியால்ட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சின்னசாமி கூறுகையில்,

“நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு திட்டமும் தரம், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. CASTLE REALITY , சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், நீண்டகால முதலீட்டு வளர்ச்சியையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கோயம்புத்தூரின் வளர்ச்சி பாதையில் முக்கிய இடத்தைப் பெறும் என்று நம்புகிறோம்.” என்றார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

-பிரீமியம் வில்லாஸ் & ப்ளாட்ஸ்
-24×7 பாதுகாப்பு வசதி
-CCTV கண்காணிப்பு
-விநாயகர் கோவில்
-சோலார் மின்வேலி பாதுகாப்பு
*பசுமை நிறைந்த சுற்றுச்சூழல்
-உயர்தர நுழைவாயில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள்
இந்த திறப்பு விழாவையொட்டி வருகை தரும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் அனைவருக்கும் Fun Zone Kids Games, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் மதிய உணவு (Lunch) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களது எதிர்கால கனவு இல்லத்திற்கான சிறந்த முதலீட்டு வாய்ப்பை அறிந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு CASTLE REALTY நிறுவனம அழைப்பதாக தெரிவித்தார். மேலும் திறப்பு விழா சலுகையாக ரூ.1லட்சம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் ஹோம்ஸ் டூ லைஃப் இரண்டாவது கிளை துவக்கம்

Published

on

திருச்சி சாலையில் துவங்கப்பட்டுள்ள புதிய ஷோரூமில் பிரீமியம் ரக ஃபர்னிச்சர்கள் , சிக்னேச்சர் கலெக்ஷன்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை

 

சர்வதேச அளவில் பிரீமியம் ஃபர்னிச்சர்கள் விற்பனையில் முன்னனி நிறுவனமான HomesToLife) ஹோம்ஸ் டூ லைஃப் தனது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலையில் துவங்கி உள்ளது..

நீண்ட அனுபவம்வாய்ந்த மற்றும் பல முன்னணி பிராண்டுகளை கையாளும் ‘(Homes Zone’) ஹோம் சோன் நிறுவனத்துடன் இணைந்து துவங்கப்பட்ட,இந்த ஷோரூமில் வீட்டிற்கான சோபா செட்கள், டைனிங் டேபிள்கள், படுக்கையறை மரச்சாமான்கள், அலுவலக ஃபர்னிச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்தர தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட பொருட்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட முறையிலும் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், HomesToLife India’-வின் நாட்டுத் தலைவர் (Country Head) வருண் காந்த் மற்றும் கிளை உரிமையாளர் ராஜ் மாரப்பன் ஆகியோர் கூறுகையில்,“தரமான தயாரிப்புகள், நவீன வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம். ஒரே இடத்தில் அனைத்து வகையான பிரீமியம் ஃபர்னிச்சர் தீர்வுகளையும் வழங்கும் மையமாக இந்த ஷோரூம் செயல்படும்” என்றனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

காந்திமா நகர் ஓடை புனரமைப்பு பணி தொடக்கம்

Published

on

கோயம்புத்தூர் | 21 ஜூன் 2026

2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறுத்துளி, கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

கோயம்புத்தூரின் முக்கிய நகர்ப்புற நீர்வழித்தடங்களில் ஒன்றான காந்திமா நகர் ஓடை (குறும்பப் பள்ளம்), காந்திமா நகர் காவல் நிலையம் அருகே தோன்றி, பன் மால், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 13.5 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து இறுதியில் இருகூர் ஏரியில் கலக்கிறது. நகரின் மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் இந்த ஓடை முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பு, திடக்கழிவுகள் கொட்டப்படுதல், ஆக்கிரமிப்பு தாவரங்கள் வளர்ச்சி மற்றும் ஓடையின் கரைகள் சேதமடைதல் போன்ற காரணங்களால், துர்நாற்றம், நீரின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கீழ்மட்ட நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி (CCMC), பி.எஸ்.ஜி. குழுமம் மற்றும் சிறுத்துளி இணைந்து ஓடையை புனரமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. முதல் கட்டமாக 3.5 கிலோமீட்டர் நீளப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் திடக்கழிவுகள் மற்றும் வண்டல் அகற்றுதல், கரைகளை வலுப்படுத்த இயற்கை மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுதல், இயற்கை சார்ந்த நீர் சுத்திகரிப்பு முறைகள் அமைத்தல் மற்றும் நீர்தரத்தை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டம் மூலம் நீரின் தரம் மேம்படுதல், துர்நாற்றம் குறைதல், திடக்கழிவு கொட்டுதல் தடுக்கப்படுதல் மற்றும் நகரின் பசுமை வளம் அதிகரித்தல் உள்ளிட்ட நீண்டகால சுற்றுச்சூழல் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புனரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக “உங்கள் கழிவைக் கவனியுங்கள்” (Watch Your Waste) என்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (21.06.2026) ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் நடைபெற்றது.

ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் திடக்கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். நீர்மாசுபாட்டால் ஏற்படும் நீர்தரக் குறைவு, துர்நாற்றம், நீர்வாழ் உயிரினங்களின் பாதிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், கழிவுகளை பொறுப்புடன் அகற்றுதல் மற்றும் நகர்ப்புற நீர்வழித்தடங்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். கிரி பிரசாத், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., பி.எஸ்.ஜி. சன்ஸ் & சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபாலகிருஷ்ணன், சிறுத்துளி நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், சிறுத்துளி அறங்காவலர்கள், ஸ்டீயரிங் கமிட்டி மற்றும் அபெக்ஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஓடை சுத்தம் செய்யும் பணியிலும் பங்கேற்றனர்.

காந்திமா நகர் ஓடையை பாதுகாப்பது என்பது ஒரு ஓடை சீரமைப்புத் திட்டம் மட்டுமல்ல; கோயம்புத்தூரின் நீர்வளத்தை பாதுகாத்து, நிலையான சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு வழங்கும் ஒரு மக்கள் இயக்கமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய சிறுத்துளி நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், நகரின் ஓடைகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

Continue Reading

Trending