Connect with us

விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் !

Published

on

ஐபிஎல் 2025 சீசனின் குவாலிபையர் 2 போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது, ஜூன் 1 அன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 203/6 ரன்கள் எடுத்தது. ஜானி பேயர்ஸ்டோவ் (38), திலக் வர்மா (44), மற்றும் சூர்யகுமார் யாதவ் (44) ஆகியோர் சிறப்பாக விளையா ஸ்கோரை உயர்த்தினார் .

பின்னர் 204 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 207/5 ரன்கள் எடுத்தது சிறப்பான வெற்றியைப் பெற்றது . கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87 ரன்கள் (8 சிக்ஸர்கள்) அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினார்.

ஐயர் மற்றும் நெஹால் வதேரா இடையே 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ட்ரெண்ட் போல்ட் நெஹால் வதேராவின் கேட்ச் தவறவிட்டது மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்த வெற்றியுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி ஜூன் 3 அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இதுவரை நடந்த 18 சீசன்களில் ஒரு ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் அடித்த மும்பை இந்தியன்ஸ் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடைந்ததில்லை. நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் எதிரான போட்டியில் இந்த சாதனை உடைக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை

டென் டென் செஸ் அகாடமி – 12வது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி 2026

Published

on

டென் டென் செஸ் அகாடமி ஏற்பாட்டில் நடைபெற்ற 12வது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி, 2026 பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை, சோளிங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ ஐயப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஒருநாள் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 245 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பல்வேறு பிரிவுகளில் 120 கோப்பைகளும், 40 பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், மிக இளம் வயது பங்கேற்பாளருக்கும், சிறப்பாக செயல்பட்ட சதுரங்க அகாடமிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு, தனிநபர் திறமைகளும் இளையோர் சதுரங்க வளர்ச்சிக்கு அளித்த நிறுவன பங்களிப்புகளும் பாராட்டப்பட்டன.

இந்தப் போட்டி, 7 வயதுக்குட்பட்டோர் (U7), 9 வயதுக்குட்பட்டோர் (U9), 11 வயதுக்குட்பட்டோர் (U11) மற்றும் 13 வயதுக்குட்பட்டோர் (U13) ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.

U7 பிரிவு:

சென்னையைச் சேர்ந்த தக்ஷிணேஸ்வர் S. P. 5.5/6.0 புள்ளிகளுடன் U7 ஆண்கள் பிரிவில் முதல் இடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த சம்யுக்தா P. 5.0/6.0 புள்ளிகளுடன் U7 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U9 பிரிவு:

சென்னையைச் சேர்ந்த த்ரிஷாந்த் P. 5.5/6.0 புள்ளிகளுடன் U9 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த பிரகதி 5.0/6.0 புள்ளிகளுடன் U9 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U11 பிரிவு:

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹர்ஷா வர்தன் S. 6.0/6.0 என்ற முழு மதிப்பெண்களுடன் U11 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த லக்ஷிதா M. 5.0/5.0 புள்ளிகளுடன் U11 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U13 பிரிவு:

செங்கல்பட்டையைச் சேர்ந்த நவ்நீத் கலியப்பெருமாள் 6.0/6.0 என்ற முழு மதிப்பெண்களுடன் U13 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். சென்னையைச் சேர்ந்த மேஹநேத்ரா M. 4.0/6.0 புள்ளிகளுடன் U13 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

பரிசுகளை ஸ்ரீ ஐயப்பா பள்ளி ஒருங்கிணைப்பாளர் திரு. கிருஷ்ணகுமார், டென் டென் செஸ் அகாடமி தலைவர் திரு. S. R. ஜனகிராமன், இணைச் செயலாளர் திருமதி கோமதி மற்றும் டென் டென் செஸ் அகாடமியின் திருமதி விஜி ஆகியோர் வழங்கினர். மேலும், மேடையில் போட்டி அமைப்பாளர் திரு. S. J. அமர்நாத் மற்றும் முதன்மை நடுவர் திருமதி I. A. S. கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Continue Reading

விளையாட்டு

மாநில அளவிலான 12-வது குழந்தைகள் சதுரங்கப் போட்டி பிப்.15-ல் சென்னையில் நடைபெறுகிறது

Published

on

டென் டென் செஸ் அகாடமி சார்பில் நடத்தப்படும் 12-வது மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி – 2026, வரும் பிப்ரவரி 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி, தமிழ்நாடு சதுரங்க சங்கத்தின் (TNSCA) அனுமதியுடன், சிறீ ஐயப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லூர் வளாகத்தில் நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதும் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில் 7, 9, 11 மற்றும் 13 வயது பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறுவர்கள் பிரிவில் 15 கோப்பைகள் மற்றும் 5 பதக்கங்கள், சிறுமிகள் பிரிவில் 15 கோப்பைகள் மற்றும் 5 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

 

போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் காலை 8.45 மணிக்குள் அறிக்கை செய்ய வேண்டும். போட்டிகள் காலை 9.30 மணிக்கு தொடங்கும். மாலை 5.00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதிலேயே சதுரங்கத்தில் மாணவர்களின் ஆர்வத்தையும் அறிவுத்திறனையும் வளர்க்கும் நோக்கில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டென் டென் செஸ் அகாடமி நிர்வாகி அமர்நாத் தெரிவித்தனர்.

போட்டி குறித்த கூடுதல் விவரங்களுக்கு +91 84382 21095 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Continue Reading

விளையாட்டு

கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கதின் 67வது ஆண்டுவிழா

Published

on

கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சிடிசி ) தனது 67வது ஆண்டு விழாவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தின் எஸ்என்ஆர் அரங்கில் சிறப்பாக கொண்டாடியது

இந்த விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார் . இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் டி.லஷ்மி நாராயணசாமி, கௌரவ செயலாளர் ஆர்.சந்திர மௌளி, துணைத் தலைவர்கள் ஆர்.சுந்தர், என்.நாராயணன் மற்றும் கே.ஆர். தினேஷ், இணைச் செயலாளர்கள் கே. மகாலிங்கம் மற்றும் சுரேஷ் குமார், பொருளாளர் சுந்தர் ஆகியோர் உட்பட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் தலைமை மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்து நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

வர்கள் தங்கள் உரையில், அடித்தள மட்டத்தில் கிரிக்கெட்டை வளர்ப்பதில் கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை பாராட்டியதுடன், மாநில மற்றும் தேசிய கிரிக்கெட்டில் கோவையின் சிறப்பான பங்களிப்பையும் குறிப்பிட்டனர். திறமையான வீரர்களை கண்டறிதல், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாக சிறப்பிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.

Continue Reading

Trending