Connect with us

கோயம்பத்தூர்

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தேசிய உயர் கல்வி மாநாட்டின் 8 ஆம் பதிப்பு துவக்கம்!

Published

on

சமூகத்தில் உள்ள முக்கிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நவீன மற்றும் புதுமையான ஆராய்ச்சிகளை மாநிலப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் முன்னெடுக்க ‘தமிழ்நாடு முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியம்’ மிகவும் பயனுள்ளதாக  வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோக்கு முன்முயற்சியாகும் என தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் – உயர்கல்வி துறை K. கோபால் வெள்ளிக்கிழமை கோவையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு – தெற்கு பகுதியின் (CII SOUTHERN REGION ) சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சி 2024ல் (CII EDUTECH EXPO 2024) கூறினார்.

 

சி.ஐ.ஐ. என்றழைக்கப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் முதலாவது சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சி (CII EDUTECH EXPO) மற்றும் அதன் தேசிய உயர் கல்வி மாநாட்டின் 8 ஆம் பதிப்பு இன்று கோவையில் நடைபெற்றது.இந்த மாநாடு நவம்பர் 15-16 கோவை கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது.

 

இதன் துவக்க நிகழ்வில் K. கோபால்,   தமிழக அரசின் உயர்கல்வி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் – கலந்து கொண்டு, சி.ஐ.ஐ.  மற்றும்  கே. பி.எம்.ஜி. எனும் ஆய்வு அமைப்பு  தயாரித்த உயர் கல்வி குறித்த முக்கிய அறிக்கையை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

 

இந்த நிகழ்வில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் S.மலர்விழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று,  உயர் கல்வி அறிக்கையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

 

முன்னதாக சி.ஐ.ஐ.யின் தெற்கு பகுதியின் தலைவர் R. நந்தினி, சி.ஐ.ஐ.யின் கோவை மண்டல முன்னாள் தலைவர் செந்தில் கணேஷ், சி.ஐ.ஐ.யின்  தெற்கு பகுதி முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், காக்னிசன்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வாரியர், கே. பி.எம்.ஜி. நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர் நாராயணன் ராமசாமி, மற்றும் சி.ஐ.ஐ.யின் கோவை மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்  உரையாற்றினர்.

 

 K. கோபால் அவர்கள் பேசுகையில், நிகழ்காலத்தில் உயர் கல்வி பாடத்துடன் தற்போது வேலைவாய்ப்புக்கு தேவைப்படும் அவசிய திறன்களை ஒன்றிணைக்க அரசு ‘விளைவுகளை மையப்படுத்தி கல்வி கற்பித்தல்’ எனும் முறையை பின்பற்றுகிறது என குறிப்பிட்டார்.

 

21 ஆம் நூற்றாண்டுக்கு தேவையான திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வழிவகை செய்யவும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதே சமயம், தொழில்துறையுடன் கல்வி துறை கைகோர்த்து மாணவர்களுக்கு கல்வி பயிலும் போதே தொழிற்பயிற்சி (INTERNSHIPS), தொழில்துறை தேவைகளை மையப்படுத்திய ஆய்வுகள் ஆகியவற்றை வழங்குவது அவர்களை இப்போதே எதிர்காலத்திற்கு தயார் செய்வதுடன், நமது பொருளாதார வளர்ச்சியை மேம்பட செய்யவும் வழிவகுக்க கூடிய ஒன்றாக அமையும் என்றார்.

 

CII தெற்கு பகுதியின் தலைவரும் இந்த சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சியின் தலைவருமான ஆர்.நந்தினி தனது வரவேற்பு உரையில்,  உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கக்கூடிய திறமைமிகு பணியாளர்களையும், தலைவர்களையும் கோவையில் உள்ள நன்மதிப்பு பெற்ற கல்வி நிறுவனங்கள் உருவாகியுள்ளது என கூறினார். இங்கு நிலவும் சிறந்த கல்வி கட்டமைப்பு, பொறியியலும், தொழில்துறையும் ஒன்று சேர்ந்த செழிக்க வைத்துள்ளது. இது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக கோவை திகழ ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்றார்.

 

காக்னிசண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வாரியர் பேசுகையில், தொழில்த்துறைக்கு தயாரான, தேவையான சிறந்த பணியாளர்களை உருவாக்க கல்வித்துறை மற்றும் தொழில்துறை இடையே உள்ள இடைவெளியை இணைக்க வேண்டியது அவசியம் என்றார்.

 

இதையடுத்து 2050ல் உயர் கல்வியின் எதிர்காலம்; உயர் கல்வியில் நிகழும் மாற்றங்கள்; தொழில்துறைக்கு தயாராகுதலை ஊக்குவித்தல், அறிவுசார்ந்த படைப்புகளை சந்தைப்படுத்துதல்; உள்ளிட்ட தலைப்புகளில்  பல்வேறு அமர்வுகள் நடைபெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

எஸ்.என்.ஆர். சன்ஸ் 42-வது நிறுவனர் நாள் விழா

Published

on

கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடு அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் நிறுவனர் நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி 42-வது ஆண்டு நிறுவனர் நாள் விழா இன்று (27.02.2026), கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள, எஸ்.என்.ஆர். கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் உயர்திரு. டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆண்டறிக்கை வாசித்தனர்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக ஏ.வி.எம். லேப்ஸ், ஏ.வி.எம். ஸ்மைல்ஸ் மற்றும் தைரோகேர் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என்று 25 ஆண்டுகள் நிறைவு செய்த 30 நபர்களைக் கௌரவித்து அவர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, 400 – க்கும் மேற்பட்ட இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள டாக்டர் எஸ்.தியாகராஜமூர்த்தி அவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருதினையும் வழங்கிச் சிறப்பித்தார். பின்னர் அவர் பேசியதாவது,

ஒரு அறக்கட்டளை 18 நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறது என்றால் அது ஒரே நாளில் நடந்ததல்ல. இந்த அறக்கட்டளையைத் தொடங்கியவர்களும், அதில் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றுபவர்களும் இந்த சமூகத்தில் உருவாக்கிய நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, உண்மை இவை போன்ற காரணிகளால் மட்டுமே சாத்தியம். நம் வாழ்வில் முன்னேற மிக முக்கியமானவை தைரியமாக முடிவெடுப்பது. அதனால் தான் என்னால் பெரிய உயரங்களைத் தொட முடிந்தது. குடும்பத்தை நேசியுங்கள். பிள்ளைகளை நம்புங்கள். அவர்களால் பெரிய மாற்றங்கள் நிகழும். என்னை என் தாய் நம்பினார்கள். நான் உயர்ந்துவிட்டேன். ஒரு ஆண் வெற்றி பெற்றால் ஒரு குடும்பம் வளரும். ஆனால், ஒரு பெண் வெற்றி பெற்றால் ஒரு சமூகமேs வளரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ், அறங்காவலர்கள் ராமகிருஷ்ணா விஜயகுமார், லஷ்மிநாராயணஸ்வாமி துரைசாமி, தலைமை செயல் அதிகாரி திரு. சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ் குமார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் நன்றியுரை நல்கினார்.

Continue Reading

கோயம்பத்தூர்

அதிமுகவை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் வரத் தயார்! – சூலூரில் எஸ்.பி. வேலுமணி பேச்சு

Published

on

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில், அதிமுக சார்பில் நலத்திட்டங்கள் வழங்குதல், வாக்குறுதிகள் விளக்கம் மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி,நடிகர் விஜய் எனக்கு மிகச்சிறந்த நண்பர், ஆனால் அரசியல் என்பது வேறு எனத் குறிப்பிட்ட அவர், ஒருமுறை விஜய்யின் திரைப்படம் ரிலீஸ் ஆக முடியாமல் பெரும் சிக்கலில் இருந்தபோது, அவர் எனது இல்லத்தில் தங்கியிருந்தார் என்றும், அப்போது நான்தான் அவரை நேரிடையாக எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் அழைத்துச் சென்று பேசி, அந்தப் படம் வெளியாவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

ஒரு தலைவர் என்பவர் நல்லவராக இருக்க வேண்டும், அதற்குச் சிறந்த உதாரணம் எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததற்கே அவர்தான் முக்கிய காரணம் என்றும், ஆனால் திமுகவில் தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை என்றும் சாடினார்.சொந்தக் கட்சிக்காரர்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கூட கண்டு கொள்ளாமல் செல்லும் போக்கு அங்குள்ளதாகவும், ஒரு நல்ல தலைவனாக இருந்தால் தொண்டர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற அந்தப் பண்பு எம்.ஜி.ஆரிடமும், தற்போது எடப்பாடியாரிடமும்  உள்ளது, மாற்றுக்  கட்சியில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், நமது கட்சியிலிருந்து சென்றவர்கள் தற்போது அங்கே உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு பழைய அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர்கள் பற்றி அவர்கள் பெயரைக் கூட சொல்ல முடியாது தெரிவித்தார். இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனத் திரளானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Published

on

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுடெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப் பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து புதுடெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை இரண்டாமாண்டு மாணவர் எஸ்.தர்ஷன், சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை இரண்டாமாண்டு மாணவி பி.ஸ்வாதி, தேசிய மாணவர் படை சார்பில் பங்கேற்ற பி.எஸ்.சி., மின்னணுவியல் மூன்றாமாண்டு மாணவி ஆர்.சந்தியா, பி.காம். சி.ஏ., இரண்டாமாண்டு மாணவர் எஸ்.ஆகாஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

இதேபோல் புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய தால்சைனிக் முகாமில் பங்கேற்ற, பி.எஸ்சி., கணினி அறிவியல் மூன்றாமாண்டு மாணவி எம்.திவ்யா ஸ்ரீ லட்சுமி, மஹாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய மாணவர் படை இயக்குநரகங்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற பி.காம். சி.ஏ., இரண்டாமாண்டு மாணவி என்.ஜனனி ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் பெற்றோர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு சாதனை மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.

Continue Reading

Trending