Connect with us

ஆரோக்கியம்

தூக்கத்துடன் சண்டை ஏன்?

Published

on

மனிதனுக்கு தனது வாழ்வில் தூக்கம் மிகவும் முக்கியமானது ஒரு நல்ல தூக்கத்தின் பரிசு விலைமதிப்பற்ற ஒன்றாகும். சுமார் ஒரு நாளைக்கு குறைஞ்சபட்சம் 7 மணி நேரமாவது தூங்குவது நம் உடலுக்கு நாம் வழங்கும் பரிசு. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் சராசரியாக இரவு 9.30 மணிக்கெல்லாம் உறங்கச் சென்றுவிடுவது வழக்கமாக இருந்த ஒன்று. தற்போது உள்ள நீவீன உலகில் பல கண்டுபிடிப்புகள் வந்த பிறகு தூக்கத்தை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோம். குறிப்பாக செல் போன் வந்த உடன் பலரது நேரத்தை தனக்குரிய நேரமாக உறிஞ்சிக் கொள்கிறது இந்த செல் போன்கள் . பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை செல் போனில் மூழ்கி நீச்சல் அடித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் இரவு வேலை என்று பகலை மறந்து வாழ்க்கையில் வெற்றிப் பெற ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஏற்படும் தீமைகளை பெரிதும் கவலைப்படாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் நம் மக்கள்.

ஆரோக்கியத்தைக் காக்கும் தூக்கம்:

மருத்துவர்களின் கூற்றுப்படி, 7 முதல் 8 மணிநேரங்களுக்கு ஓய்வெடுக்காமல் இருப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என குறிக்கின்றனர். சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு மனநலப் பிரச்சனைகளை உருவாகும் வாய்ப்புகள் அதிகம். வாழ்வில் பலர் ஏதாவது பிரச்சனைகளுடன் தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். இதில் இருந்து மீண்டு எல்லா கவலைகளையும் மறக்க வைக்கக் கூடிய ஒரு மருந்து தூக்கம். வாழ்கையில் எவ்வுளவு பிரச்சனைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் மறக்கடித்து நிம்மதியினை தருகிறது தூக்கம்.இதனை கருத்தில் கொள்ளாமல் பலர் இரவு வேளை தாண்டியும் செல் போனை பயன்படுத்திக் கொண்டும், கேம்ஸ் விளையாடிக்கொண்டும் இருக்கின்றனர். இதனால் ஒரு நாளைக்கு 7-8 மணி நேர தூக்கம் அவசியம் என்பதை பலரும் மீறுகிறார்கள். சரியான நேரத்துக்கு தூங்கவில்லை என்றல் பல உடல்நலப் பிரச்சனைகள் வரக்கூடும் என்பது பலருக்கும் தெரிஞ்சிருந்தும் அதை பொருட்படுத்துவதில்லை என்பதே வருத்துக்கூடிய விஷயம்.

தூக்கம் தடையால் வரும் பிரச்சனை :

தூக்கம் குறைவானால் முதலில் பாதிப்பது மனநலம்தான் எதை செய்கிறோம், செய்வதை சரியாக செய்கிறோமா? எனப் பல கேள்விகள் நம்மை வந்து தாக்கும். இதேப் போல நாள் அடைவில் அறிவுத்திறன் பாதிப்பு அடைந்து சிந்திக்கும் திறன் குறைந்து விடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கத் ஆரம்பிக்கும். ஜீரண கோளாறு, படபடப்பு, பயம் என பட்டியலிட வழிவகுக்கும் இந்த குறைவான துக்கம் .

நல்ல தூக்கம் கிடைக்க:

அலாரம் அடிக்கும் முன்பாகத் தானாகவே விழித்தெழும். அம்மாதிரி இயல்பாக எழுவதற்கு உடல் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறதோ, அதுதான் ‘நல்ல தூக்கம் நம் உடலுக்குத் தேவையான துக்கம் .இந்த மாதிரியான தூக்கம் அனைவருக்கும் கிடைப்பதில்லை நல்ல தூக்கம் கிடைக்க படுக்கும் நேரத்தில் மனதை அமைதிப்படுத்தும் சில நடைமுறைகள் நாம் பின்பற்றுதல் வேண்டும். குறிப்பாக நாம் உறங்கும் இடம் வெளிச்சம் இல்லாத இடமாக இருக்க வேண்டும். படுக்கையறையில், சரியான வெப்பநிலை நம் தூக்கத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று.சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகள் நாம் அமைத்துக்கொள்வது நல்ல தூக்கத்துக்கு முக்கியமான ஒன்று. தொலைக்காட்சி, செல் போன் போன்ற உபகரணங்களை உறங்க செல்ல சுமார் 1 மணிநேரத்துக்கு முன் மறந்திட வேண்டியது கட்டாயம் .

உறங்கச் செல்வதற்கு முன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் அமைதியான தூக்கத்துக்கு நம் உடலுக்கு ஏற்ற சமநிலையான உணவை உண்ண வேண்டும். “நன்றாக தூங்குவது உங்கள் ஒட்டுமொத்த வாழ்வை பயனுள்ளதாக்கும். தூங்கும் போது மன அழுத்தமில்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள், அதிகமாக யோசிப்பதை நிறுத்தி விட்டு விரைவில் தூங்க முயற்சி செய்யுங்கள். நாள் முழுவதும் நீரேற்றத்துடன் இருந்தால் நன்றாக தூங்கலாம். உங்கள் உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் பொழுது குடித்துவிடுங்கள் நீங்கள் தூங்கும்போது மூச்சுத் திணறல் மற்றும் கால் பிடிப்புகளை வராமல் தடுக்கலாம் தூக்கமும் தடைபடாமல் இருக்கும்.சரியான தூக்கம் கிடைப்பது ஒரு கடினமான பணி அல்ல, ஆனால் எளிதாக கிடைக்க சில முறைகளை பின்பற்றியே ஆகவேண்டும். தூக்கம் நம் உடலுக்கு கிடைத்த ஓர் புதையல் அதை பாதுக்காப்பாக வைத்திருப்பது நமக்கு பலன் தரும் என்பதை அறிந்து உறங்குவோம்.

 

-சதீஷ்குமார்

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஆரோக்கியம்

உலக செரிமான சுகாதார தினம்: கோவையில் “VGM IBD Clinics” தொடக்கம்

Published

on

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வி.ஜி.எம் மருத்துவமனை, உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, குடல் அழற்சி நோய்களான (Inflammatory Bowel Disease – IBD) க்ரோன்ஸ் நோய் (Crohn’s Disease) மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் (Ulcerative Colitis) நோயாளிகளுக்கான பிரத்யேக VGM IBD கிளினிக்கை தொடங்கியது. இக்கிளினிக்கை மூத்த குடலியல் நிபுணரும் பத்ம பூஷண் விருதுபெற்றவருமான டாக்டர் கே.ஆர். பழனிசாமி திறந்து வைத்தார்.

க்ரோன்ஸ் நோய் மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் உள்ளிட்ட IBD நோய்கள் இந்தியாவில் இளம் வயதினரிடமும், வளரிளம் பருவத்தினரிடமும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம் காணப்படுதல், வயிற்றுவலி, காரணமற்ற உடல் எடை இழப்பு, ரத்தசோகை மற்றும் அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கிளினிக்கில் மேம்பட்ட எண்டோஸ்கோபி பரிசோதனைகள், பயாலஜிக் சிகிச்சைகள், ஊட்டச்சத்து ஆலோசனைகள் மற்றும் சிக்கலான IBD நோயாளிகளுக்கான குறைந்த காயப்படுத்தும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்துறை ஒருங்கிணைந்த சிகிச்சை வசதிகள் வழங்கப்படுகின்றன.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, IBD நோயாளிகள் மற்றும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கு நோயை புரிந்துகொண்டு திறம்பட நிர்வகிக்க உதவும் வகையில் “My Gut, My Voice” என்ற மாதாந்திர நோயாளர் ஆதரவு மற்றும் விழிப்புணர்வு மன்றத்தையும் வி.ஜி.எம் மருத்துவமனை அறிமுகப்படுத்தியது.

இந்நிகழ்வில் பேசிய வி.ஜி.எம் மருத்துவமனையின் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத், “VGM IBD கிளினிக் மூலம் ஆதாரப்பூர்வமான, நோயாளி மையப்படுத்தப்பட்ட சிகிச்சை வழங்கப்படுவதுடன், IBD நோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வும் மேம்படுத்தப்படும்” என்றார்.

அறிவியல் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு டாக்டர் வம்சி மூர்த்தி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து, டாக்டர் மதுரா பிரசாத் சுமன் IBD மற்றும் குடல் நுண்ணுயிரிகள் (Gut Microbiome) குறித்து, டாக்டர் எஸ். திவ்யசாரதி ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்து, IBD ஆலோசகரான திரு. சுமந்த்ரன் நோயாளிகளுக்கான உளவியல் ஆதரவு குறித்து சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியை டாக்டர் மித்ரா பிரசாத் ஒருங்கிணைத்தார். நன்றியுரையை டாக்டர் சி.பி.எஸ். சுமன் வழங்கினார்.

ADVERTISMENT

Continue Reading

ஆரோக்கியம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி

Published

on

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, நுரையீரல் மற்றும் இரைப்பை குடல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோயம்புத்தூர்ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி புரூக்ஃபீல்ட் மாலில் இன்று (மே 16) தொடங்கியது.தொடக்க விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி திரு. C.V. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி திரு. D. மகேஷ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் S. ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் S. அழகப்பன், இணை மருத்துவக் கல்லூரியின் (SRHIAHS) முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின் சிறப்பம்சங்கள்:

மருத்துவமனையின் எல்லைகளைத் தாண்டி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான வணிக வளாகத்தில் (Mall) இந்த நிகழ்வு நடத்தப்படுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவக் கல்லூரி (SRHIAHS) மாணவர்கள் உருவாக்கிய நேரடி செயல் மாதிரிகள் (Working Models) கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தன.

சுவாசம் மற்றும் செரிமானம் தொடர்பான சிக்கலான மருத்துவக் கருத்துகளைச் சாமான்ய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நுரையீரல் பாதிப்பு மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் குறித்து மாணவர்களும் மருத்துவர்களும் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.

உயர்தர மருத்துவச் சேவையுடன், சமூகப் பொறுப்புணர்வுடன் விழிப்புணர்வுப் பணிகளையும் முன்னெடுப்பதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எப்போதும் முன்னிலை வகிக்கிறது என்பதை இந்நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.
இக்கண்காட்சி நாளையும் (மே 17) புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் நடைபெறவுள்ளது

Continue Reading

ஆரோக்கியம்

கோவை ஏஜிஎஸ் ஹெல்த்கேர் கார்டியோ–சர்க்கரை நோய் சிறப்பு முகாம்

Published

on

கோவை ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கார்டியோ–சர்க்கரை நோய் சிறப்பு முகாம

 

கோயம்புத்தூர், ஏப்ரல் 6, 2026:

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு இந்த நாளை கடைபிடித்து வருகிறது.

இந்த ஆண்டின் “Together for Health. Stand with Science” என்ற கருப்பொருளின் கீழ், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூமியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அறிவியல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வருடம் முழுவதும் நடைபெறும் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையம் சார்பில், மக்களிடையே முன்னெச்சரிக்கை சுகாதார பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் ஆதித்யன் குகன் அவர்களின் வழிகாட்டுதலில், 25 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில், ரூ.10,000 மதிப்புள்ள கார்டியோ–டயபிட்டிஸ் மாஸ்டர் ஹெல்த் சேக்கப் தொகுப்பு, இந்த வாரம் முழுவதும் வெறும் ரூ.1,000க்கு வழங்கப்படுகிறது.

அறிவியல் தரவுகளின்படி, சமீப காலங்களில் ஏற்படும் திடீர் இதய மரணங்கள், பெரும்பாலும் நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் இணைந்த இதய நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளன. குறிப்பாக 25 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் இது அதிகமாக காணப்படுவதால், இந்த வயது குழுவினருக்கு அதிக பயன் அளிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு சுகாதார தொகுப்பில் முழுமையான இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், இமேஜிங் பரிசோதனைகள், மேலும் எக்கோ (ECHO) உள்ளிட்ட மேம்பட்ட இதய பரிசோதனைகள் அடங்கும்.

ஏஜிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலக சுகாதார தினத்தை அனுசரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளுடன் இணைந்து, கொங்கு மண்டல மக்களுக்கு முன்னெச்சரிக்கை சுகாதார சேவைகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று டாக்டர் ஆதித்யன் குகன் தெரிவித்தார்.

இந்த முகாம் 2026 ஏப்ரல் 7 முதல் 11ஆம் தேதி வரை, கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையத்தில் நடைபெறும். ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில், தினமும் 50 பேருக்கு மட்டும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய: 9944333006 / 8489655556 / 9659455556.

 

Continue Reading

Trending