Connect with us

கோயம்பத்தூர்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் சிறந்த ஆட்சி – பிரதமர் நரேந்திர மோடி

Published

on

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுடனான எனது தொடர்பு அரசியல் சார்ந்தது அல்ல, அது இதயப்பூர்வமானது’

குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வரவில்லை. திமுக எம்ஜிஆரை அவமதிக்கிறது. திமுக அரசியலால் தமிழ்நாட்டிற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை செய்தவர் எம்ஜிஆர்

அரசியல்ரீதியாக ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எம்ஜிஆருக்கு பிறகு சிறப்பான ஆட்சியைத் தந்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர், ஜெயலலிதா சிறந்த ஆட்சியை தந்தனர்.

நல்லாட்சியை நடத்தி தமிழ்நாட்டிற்கு கல்வியையும் சுகாதாரத்தையும் கொடுத்துள்ளனர். நாடு வளரும்போது அதே வேகத்தில் தமிழ்நாடும் வளரும் என்பதே எனது உத்திரவாதம்.

தமிழ்நாட்டிலிருந்து ராணுவ தளவாடங்களைத் தயாரிக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

2024-ல் தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் கட்சி பாஜக .தமிழ்நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள்

மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு திமுக எதுவும் செய்யவில்லை

தமிழ்நாட்டிற்கு மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கிவருகிறோம்

தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள்

தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது

தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழ்நாட்டை தன் இதயத்தில் வைத்துள்ளது பாஜக;

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள்

– பிரதமர் நரேந்திர மோடி.

கோயம்பத்தூர்

ஐ ஃபவுண்டேஷன் இலவச கண் பரிசோதனை

Published

on

கண் மருத்துவ சேவையில் முன்னணி வகிக்கும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 14, 2026 வரை பல்வேறு விழிப்புணர்வு மற்றும் இலவச கண் பரிசோதனை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

தென்னிந்தியாவில் 27 கிளைகளை கொண்டு கடந்த 46 ஆண்டுகளாக சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வரும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, கோயம்புத்தூரில் 1.20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கண் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக குளுக்கோமா வாரம் அனுசரிக்கப்படுகிறது. குளுக்கோமா பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உலக குளுக்கோமா சங்கம்முன்னெடுக்கும் உலகளாவிய முயற்சியாக இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. நோயாளிகள், கண் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண் பார்வையை பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக குளுக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வழக்கமான கண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
முழுமையான பார்வை இழப்பு

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 3 முதல் 5 சதவீதம் இந்தியர்கள் குளுக்கோமா (கண் அழுத்த நோய்) ஏற்படும் அபாயத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் சுமார் 90 சதவீதம் பேர் தங்களுக்கு குளுக்கோமா இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.உலகளவில் சுமார் 76 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.1 மில்லியன் பேர் முழுமையான பார்வை இழப்பை சந்தித்துள்ளதுடன், 4.2 மில்லியன் பேர் கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 40 வயதுக்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் குளுக்கோமா சிகிச்சையில் குறைந்தபட்ச ஊடுருவும் குளுக்கோமா அறுவை சிகிச்சை முக்கிய முன்னேற்றமாக உருவெடுத்துள்ளது.உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 14 வரை தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இதற்குடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு இடங்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றன.
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் iStent, KDB Glide, GATT மற்றும் MINIJECT போன்ற புதிய MIGS சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தீவிர குளுக்கோமா நோயாளிகளுக்கு Trabeculectomy மற்றும் Aqueous Drainage Implants மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தி ஐ ஃபவுண்டேஷனின் அனைத்து கிளைகளிலும் ஆண்டுதோறும் 1500 க்கும் மேற்பட்ட குளுக்கோமா அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் குளுக்கோமா பிரிவு ஆலோசகருமான டாக்டர் சித்ரா ராமமூர்த்தி, டாக்டர் ஆர். முரளிதர், டாக்டர் ஐமன் அகமது கான் மற்றும் டாக்டர் நிரஞ்சனா பாலசுப்ரமணியம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து குளுக்கோமா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

கோயம்பத்தூர்

அதிமுகவின் முப்பெரும் தலைவர்களின் பிறந்தநாள் விழா

Published

on

அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய முப்பெரும் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 300 கிரிக்கெட் அணிகளின் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வடவள்ளியில் நடைபெற்றது. அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் Er. R. சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம் மற்றும் மாநில மாணவரணி செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

அதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் கே அர்ஜுனன் கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார். இதில் மாநில, மாவட்ட மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். எம்எல்ஏ வழங்கினார்

Continue Reading

கோயம்பத்தூர்

கோவை கணபதி பகுதியில் ‘கிராண்ட் சிட்டி’ – புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டம் அறிமுகம்

Published

on

கே.ஜி குழுமத்தின் டவுன் & சிட்டி டெவலப்பர்ஸின் , தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட் சிட்டி’ யை கோவை சத்திய ரோடு, கணபதி பகுதியில் அறிமுகப்படுத்தியது.இந்த திட்டத்தை இதன் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், உதவி துணைத் தலைவர் யுவராஜ், மற்றும் மூத்த மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஷுவா ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

இது குறித்து சஞ்சனா விஜயகுமார் கூறுகையில், “வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மையமாக உருவெடுத்து வரும் கணபதி – சரவணம்பட்டி ஐடி காரிடார் பகுதியில் அமைந்துள்ள ‘கிராண்ட் சிட்டி’, முன்னணி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் புரோசோன் மால் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அருகில் இருப்பதால், சிறந்த இணைப்பும் வசதியான நகர வாழ்க்கையும் ஒருங்கிணைந்த வாழ்வையும் வழங்கும் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் 1, 2 மற்றும் 3 பி.எச்.கே அபார்ட்மெண்ட்கள் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப திறமையான இடவசதி திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டம் அதிகமாக கிடைக்கும் வகையில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வாஸ்து முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளில், சில 3 பி.எச்.கே வீடுகள் பொதுச் சுவர் இல்லாமல் தனியுரிமை அம்சத்துடன் வழங்கப்படுகின்றன. மேலும், இவி சார்ஜிங் வசதி மற்றும் ஸ்மார்ட் ஹோம் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.குடியிருப்பாளர்களுக்காக குழந்தைகள் விளையாட்டு பகுதி, கசீபோ அமர்வு, அழகிய தோட்டம், ஜிம் மற்றும் பார்ட்டி லான் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை முறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேலும் மார்ச் 8 வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இவி பைக் வழங்கப்படும் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் 25க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக டவுன் & சிட்டி டெவலப்பர் நிறுவனம் நிறைவு செய்து, 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளது

Continue Reading

Trending