Connect with us

அரசியல்

எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் காலம் நெருங்கிவிட்டது; -டிடிவி தினகரன்

Published

on

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்ட எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும், மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. என சூளுரைத்து ஏழை, எளிய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஜெயலலிதாவின் விசுவாசமிக்க உண்மைத் தொண்டர்களுமாகிய தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது இதயம் நிறைந்த அன்பு வணக்கங்கள். தமிழ்நாட்டை இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுகவை ‘தீய சக்தி’ என்று சொன்ன எம்ஜிஆரும், அம்மாவும்

தங்கள் காலம் வரை திமுகவை தலைதூக்கவிடாமல் தமிழக மக்களை பாதுகாத்து வந்தனர்.

அம்மாவின் மறைவுக்கு பிறகு சில துரோகிகளாலும், சில சுயநலவாதிகளாலும் அம்மாவின் மக்கள் நல ஆட்சிக்கு முரணான வகையில் சிலர் செயல்பட்டதாலும் தீயசக்தியான திமுக அரியணை ஏறியது. எனக்கென்று எந்த ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் கிடையாது. என் உயிரினும் மேலான என் அருமை கழகக் கண்மணிகளும், என் மீது அன்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழ் நாட்டு மக்களும் தான் எனக்கு சொந்தம் எனக்கூறிய அம்மாவின் வளர்த்த இயக்கம், இன்று கயவர்களின் கரங்களில் சிக்கித் தவிக்கிறது.

அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற கடமையை முன்னிறுத்தித்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. எதிரிகளோடு சேர்த்து துரோகிகளையும் எதிர்கொள்ள வேண்டிய காலச்சூழல்தான் நமக்கு இப்போது உருவாகியுள்ளது. ஒரு சிலரின் சதித் திட்டங்களால் தேர்தல்களில் பெரிய அளவிலான வெற்றிகளை நம்மால் பெற முடியவில்லை என்றாலும், இன்னும் எத்தனை எத்தனை தேர்தல்கள் வந்தாலும் களத்தில் நின்று மக்களைச் சந்தித்து வெற்றி பெறும் திறனை இறைவன் நமக்கு வழங்கியிருக்கிறார். உடலெங்கும் குருதியைக் கொண்டு சேர்க்கும் நரம்புகளைப்போல, கழகத்தின் பெருமைகளைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் சக்திதான் நீங்கள். நம்மை அழித்துவிடுவோம், ஒழித்துவிடுவோம் என்கின்றனர். அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் நாம் என்ன மண் பொம்மைகளா? போர்க்குணம் கொண்ட ஜெயலலிதா அவர்களின் பிள்ளைகள் அல்லவா? எத்தனையோ சோதனைகளைச் சந்தித்திருந்தாலும், சோர்ந்துவிடாமல் இமயமாக உயர்ந்து நிற்கிறோம். எதிரிகளையும் துரோகிகளையும் களைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அவர்களைப் அவர்களைப் புறக்கணிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.

இது நமக்கான காலம். தமிழ்நாட்டின் எதிர்காலம் நாம்தான் என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். ஒரு சில சுயநலவாதிகள் சுயலாபத்திற்காக நம்மை விட்டுப் பிரிந்து சென்றாலும், உண்மையான கழகத் தொண்டர்கள் அனைவரும் எந்தவித பலனும் எதிர்பாராமல் உழைத்துக் கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன். அதை என்றும் நான் நினைவில் கொள்வேன். விசுவாசமிக்க தூய தங்கங்களே… எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறது. களம் காண்பதில் களைப்பறியா தீரர்கள் நாம். நம்மால் முடியாதது எதுவுமில்லை. இனிவரும் காலங்களில் நீங்கள் வெற்றிச் செய்திகளை மட்டுமே கேட்பீர்கள். அதற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். எதிர்வரும் மக்களவைத் தேர்தல் வெற்றி மூலம் நாம் யார் என்பதை உலகறியச் செய்வோம். அம்மாவின் கோட்டையாக விளங்கிய கோவை தற்போது எதிரிகள் மற்றும் துரோகிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தற்காலிகமாக குடி கொண்டிருக்கும் அவர்களை அகற்றிவிட்டு, கோவை என்பது அம்மாவின் உண்மைத் தொண்டர்களின் கோட்டை என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகவே வரும் 21ஆம் தேதி காலை 9 மணியளவில், கோவை, சின்னியம்பாளையத்திலுள்ள ‘பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில்’ நடைபெற உள்ள கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன். அந்தநாள் எப்போது என ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் எழுச்சியும் தன்னம்பிக்கையும் நிச்சயம் நம்மை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. மக்களைச் சந்திப்போம், உங்களோடு நானும் வருகிறேன். புதிய சரித்திரம் படைக்க புறப்படட்டும் ஜெயலலிதா அவர்களின் இந்தப் படை. “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் ஆயத்தமாவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

அரசியல்

வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

Published

on

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி nநடைபெற இருக்கிறது , அனைத்து கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கிய நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக அறிவிக்கப்படாமல் இருந்தது . இன்று இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

வேட்பாளர் பட்டியல்

பொன்னேரி (எஸ்சி)- துரை சந்திரசேகர்

வேளச்சேரி- அசன் மௌலானா

ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி)- செல்வப்பெருந்தகை

சோளிங்கர்- ஏ.எம். முனிரத்தினம்

ஊத்தங்கரை (எஸ்சி)- ஆர்.குப்புசாமி

கிருஷ்ணகிரி- ஏ. செல்ல குமார்

பென்னாகரம்- ஜிகேஎம் தமிழ் குமரன்

ஆத்தூர் (எஸ்சி)- எஸ்.கே.அர்த்தனாரி

ஈரோடு கிழக்கு- கோபிநாத் பழனியப்பன்

உதகமண்டலம்- பி.ராமச்சந்திரன்

கவுண்டம்பாளையம்- கே.பி. சூர்ய பிரகாஷ்

சிங்காநல்லூர்- V. ஸ்ரீநிதி நாயுடு

துறையூர் (எஸ்சி)- விச்சு லெனின் பிரசாத்

கடலூர்- ஏ.எஸ். சந்திரசேகரன்

மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகமது

அறந்தாங்கி- டி.ராம சந்திரன் காரைக்குடி- எஸ்.மாங்குடி

உசிலம்பட்டி- டி.சரவண குமார்

சிவகாசி- கணேசன் அசோகன்

திருவாடானை- ராம கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம்- எஸ்.ஊர்வசி அமிர்தராஜ்

சங்கரன்கோவில் (எஸ்சி)- சங்கை கணேசன்

அம்பாசமுத்திரம்- வி.பி. துரை

நாங்குநேரி- ரூபி மனோகரன்

குளச்சல்- டாக்டர் தாரகை குத்பர்ட்

விளவங்கோடு- டி.டி.பிரவீன்

கிள்ளியூர்- எஸ். ராஜேஷ் குமார்

Continue Reading

அரசியல்

தேர்தலில் பிரச்சாரம் அண்ணாமலை உறுதி

Published

on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட அறிவிக்கபட்டுள்ள வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஊழல், அலட்சியம் மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்த… தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதர சகோதரிகளின் பெரும் ஆதரவை பாஜக வேட்பாளர் அனைவரும் பெற்றுள்ளனர்.

நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பரந்த அளவிலும், ஒரு நோக்கத்துடனும் முன்னேறியுள்ளது.

தேசம் முன்னேறிச் செல்லும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவமிக்க, சுயநலமிக்க திமுக அரசால் தமிழகம் பின்தங்கியுள்ளது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தொண்டனாகிய நான், வெற்றி பெறும் நமது பாஜக மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்.

Continue Reading

அரசியல்

தமிழக தேர்தல் – இன்று வேட்புமனு தாக்கல்

Published

on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று தொடங்குகிறது

இன்று தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி 11AM – 3PM வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மனுக்கள் மறுநாள் (ஏப்-7) பரிசீலிக்கப்பட உள்ளன

வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9ஆம் தேதியே கடைசி நாளாகும்

Continue Reading

Trending