குருப்பம்பாளையத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் மகேந்திரன், மே 5-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவர் பிரணவா ஏஜென்சி டீலர்ஷிப்பைக் கையாண்டு வந்தவர். திருமணமான மகேந்திரனின் மனைவி திருமதி காயத்ரி மகேந்திரன். இவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அந்தக் குழந்தைக்கு 11 மாதங்கள் ஆகிறது. சிவசாமி மற்றும் மணி அவர்களின் ஒரே மகன் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது
தங்கள் துயரத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, மகேந்திரனின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். குமரன் மருத்துவ மையத்தில், மகேந்திரனின் கல்லீரல், சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகளை வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு ஐந்து உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
“இத்தகைய துயரமான சூழலிலும் அக்குடும்பத்தினர் எடுத்த இந்தத் துணிச்சலான முடிவு, மனிதநேயத்திற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது