கோயம்புத்தூர் அக்ஷயம் சாரிட்டபிள் டிரஸ்ட் தனது முதலாம் ஆண்டு நிறைவு விழாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் கொண்டாடியது.
விழாவை முன்னிட்டு, 11 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் காப்பு (சீமந்தம்) நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு, சீர்வரிசைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் Lions Club of International District 3242 C இணைந்து பங்கேற்று விழாவை மேலும் சிறப்பித்தது.
விழாவில் மாவட்ட ஆளுநர் PMJF A. ராஜசேகர் மற்றும் அவரது துணைவியார் MJF நந்தினி ராஜசேகர், மாவட்ட ஆளுநர் (E) 2026-2027 PMJF P.S. செல்வராஜ் மற்றும் அவரது துணைவியார் MJF ஜெயந்தி செல்வராஜ், முதல் துணை மாவட்ட ஆளுநர் (E) PMJF அட்வ. சூரி நந்தகோபால் மற்றும் அவரது துணைவியார் லயன் பிரதீபா நந்தகோபால், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் (E) PMJF P.N. பாஸ்கர் மற்றும் அவரது துணைவியார் லயன் ரேணுகா தேவி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் முன்னாள் மாவட்ட ஆளுநர்களான PMJF Dr. R. பழனிசாமி, PMJF Dr. சரதாமணி பழனிசாமி, MJF நறுமலர் கருணாநிதி, PMJF S. ராம்குமார் மற்றும் MJF மேகனா ராம்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேற்கு நாடு சீமா வடுகர் நலச்சங்கத்தின் தலைவரும், நாக்குப்பேட்டா படுகர் நலச்சங்கத்தின் செயலாளருமான PMJF K. மணிவண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இவ்விழாவிற்கு தவம் அறக்கட்டளை, Keerthi Super Market, Universal Enterprises, Life of Autism Trust உள்ளிட்ட நன்கொடையாளர்கள் ஆதரவு வழங்கினர். அவர்களுக்கு கோயம்புத்தூர் அக்ஷயம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திய கோயம்புத்தூர் அக்ஷயம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் அனைவருக்கும், குறிப்பாக அதன் தலைவர் MJF Dr. D. கர்ணன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.