குவைத் வாழ் இந்தியர்கள் ஊருக்கு செல்ல திருச்சி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் மங்களூர் விமான சேவைகள் பயன்படுத்தி கொள்ளுங்கள்:
குவைத்திலிருந்து சாலை வழியாக சென்று சவுதியின் தம்மாம் விமான நிலையம் வழியாக திருச்சிக்கு AL JAZEERA விமான நிறுவனம் தமது விமான சேவையை ஏப்ரல் 7 ம் தேதி முதல் தொடங்க உள்ளது.வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த விமான சேவை வழங்கப்படும்.
எப்படியாவது ஊருக்கு போகணும் என்று எண்ணும் நபர்கள் கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் மங்களூர் விமானங்களில் சென்றும் ரயில் பஸ் பிடித்தாவது ஊருக்கு போகலாம்.
டிரான்சிட் விசாவுக்கு Extra கட்டணம் கிடையாது. நிபந்தனைகளை தெளிவாக படித்து பயணச்சீட்டை எடுக்கவும்.
தேவையான நபர்கள் பயன்படுத்தி கொள்ளவும். இந்த அறிவிப்பை ஜசிரா ஏர்வேஸ் இன்று(30/03/26) சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை குவைத்திலுள்ள மற்ற தெரியாத இந்தியர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்