Business

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற மில்லியனேர் சம்மிட் 2026

Published

on

சென்னையில் மில்லியனேர் சம்மிட் 2026 சிறப்பாக நடைபெற்றது. தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழில் முனைவோர் மற்றும் நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு நிதி அறிவு, தலைமைத்துவம் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இந்த மாநாட்டின் போர்டு உறுப்பினர்களாக ஹாலிடே சீசென்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவி குமார் எஸ், Aesthetic டிசைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO . ஏ. எஸ். ராஜசேகர், Rainbow Forms நிறுவனத்தின் CMO அகிலன் மோகன்தாஸ், Venkatram Catering Services நிறுவனத்தின் CEO . ஆர். வெங்கடராமன், S.V. Plymart நிறுவனத்தின் நிறுவனர் சண்முகம் ராஜா, LoansFunding.in நிறுவனத்தின் இயக்குநர் நிர்மல் ஜே, Niile Technical Skill & Consulting Pvt. Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சிவசங்கர் வி. பி, Tritech Infosystems Pvt. Ltd. நிறுவனத்தின் Business Head நாச்சியப்பன் என். சி. டி, Unichem Industries Pvt. Ltd. நிறுவனத்தின் Managing Director காஜா மொஹிதீன், Samy Jose Boxing Academy நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ரிச்சர்ட் கே. யூசுப் மற்றும் Executives Collaboration Pvt. Ltd. நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சி. எச். வில்சன் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் ஏற்பாட்டு குழுவில், Touchmark Descience நிறுவனத்தின் CEO பாரதிராஜா தங்கப்பளம், SARGUN Financial Services Pvt. Ltd. நிறுவனத்தின் CEO சர்குனன் தனிகைமாலி, மற்றும் Stemfunnels Marketing Agency நிறுவனத்தின் CEO திரு. ஹாட்லி ஜோன்ஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.

பல்வேறு துறைகளில் இருந்து கலந்து கொண்ட சுமார் 40 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டு, இந்த மாநாடு அறிவுப் பகிர்வு, தொழில் வளர்ச்சி மற்றும் ஊக்கத்தை அளிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Click to comment

Trending

Exit mobile version