கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பூத் கைமுட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கோவை பேரூர் செட்டிபாளையம் அருகே நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக கழக தலைமை நிலையச் செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் பேசிய வேலுமணி : நான் எந்த பதவியில் இருந்தாலும் உங்கள் சகோதரன் பொன்விழா கண்ட இயக்கம், 31 ஆண்டுகள் ஆளும்கட்சி அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் இருப்பதே பெருமை .தமிழ்நாட்டில் அதிகமான திட்டங்களை தந்தது அதிமுக தான் , காவேரி நீர் பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை உள்பட தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். மத்திய அரசிடம் இருந்து ஏராளமான திட்டங்களைப் பெற்றுத்துள்ளோம். கோவை நகரின் போக்குவரத்து நெரிசல், தொழில் வளர்ச்சி, மக்களின் பயண வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் அப்போது , கோவைக்கு மெட்ரோ திட்டம் உறுதியாக கொண்டு வரப்படும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு, திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளும் பெற்று, பணிகள் விரைவாக தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் , கோவைக்கு அதிமுக அரசு நிறைய வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளது மிக முக்கியமான சாலைகளை விரிவுபடுத்தி விபத்துகளை தடுத்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து உயிரை காப்பாற்றியுள்ளோம். விரைவில் சட்டசபை தேர்தல் வர இருக்கின்றது. அதில் 210 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் எனக் கூறினார்.
இக்கூட்டத்தில் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், பேரூராட்சி செயலாளர்கள், , மற்றும் வட்ட கழக செயலாளர்கள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.