எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் கோவை மாநகர் சித்தாபுதூர் பகுதியில் இயங்கும் பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை’ இன்று தனது மேம்படுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சை பிரிவின் திறப்பை அறிவித்தது.
இந்த புது பிரிவை, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் மற்றும் பலர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இதன் மூலம் பக்கவாதம், மாரடைப்பு , மற்றும் பாலி-ட்ராமா எனும் ஒரே நபருக்கு உடலின் பல இடங்களில் ஏற்பட்ட ஆபத்தான பாதிப்புகள் ஆகியவற்றுக்கு என்.ஏ.பி.ஹெட்ச். (மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்) கொடுத்துள்ள வழிமுறைகள் உடன் சர்வதேச தரத்துடன் ஒப்பிடக்கூடிய உயர்-துல்லியமான சிகிச்சையை வழங்க முடியும்.
இந்த 24 மணிநேர சேவை என்பது 10க்கும் மேற்பட்ட அவசர மருத்துவர்கள் மற்றும் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சையில் பயிற்சி பெற்ற 40 அவசர செவிலியர்கள் உட்பட, ஒருங்கிணைந்த, பல்துறை அவசர சிகிச்சைக் குழுவால் இயக்கப்படுகிறது.
இத்துடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மேம்பட்ட லைஃப் சயின்ஸ் ஆம்புலன்ஸ் நெட்வொர்க் மூலம், மருத்துவமனைக்கு நோயாளி அழைத்துவரப்படும் போதே அவரின் பாதிப்பு நிலையின் தீவிரத்தன்மையை சீராக்க பிரத்தியேக மருத்துவ வசதிகள் மற்றும் கண்காணிப்பு அம்சங்கள் இடன்பெற்றுள்ளன.
இந்த புதுமையான அமைப்பு, அவசர சிகிச்சைப் பிரிவில் அமைந்துள்ள இம்மருத்துவமனையின் அதிநவீன ஸ்மார்ட் கண்காணிப்பு மையம் மூலம், நோயாளிகளை நிகழ்நேர கண்காணிப்பில் வைத்திருக்கும்.
இந்த ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. உள்ளே, நோயாளின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப சிகிச்சைக்கான மூன்று அடுக்கு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நவீன மறுஉயிரூட்டல் அறைகளில் சி.டி., எம்.ஆர்.ஐ., மற்றும் டிஜிட்டல் இமேஜிங்கிற்கான வசதிகள் ஆகியவை உள்ளன. இது வேகமாக பாதிப்பை கண்டறியவும், சிகிச்சையில் தாமதங்களைத் தவிர்க்க உதவும்.