சென்னையில் தனியார் அமைப்பு நடத்திய மருத்துவத் துறையின் சிறப்பை போற்றும் விருது வழங்கும் விழாவில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜெம் புற்றுநோய் மையம் , கொங்கு மண்டலத்தின் முன்னணி 20 புற்றுநோய் சிகிச்சை மையங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். எம். நாசர் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
“கொங்கு மண்டலத்தின் சிறந்த புற்றுநோய் மையம்” என்ற இந்த விருதை, ஜெம் புற்றுநோய் மையத்தின்மூத்த ஆலோசகர் – மருத்துவ ஆன்காலஜி டாக்டர் பாரத் ரங்கராஜன், மற்றும் ஜெம் தலைவர் & மூத்த ஆலோசகர் – அறுவை சிகிச்சை ஆன்காலஜி துறை டாக்டர் சிவகுமார் குப்புசாமி, ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.