வீட்டை வாடகைக்குவிடப்பட்டால் , அந்த ஒப்பந்தந்தை உரிமையாளர் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும்.வீடு முன்பணம் (அட்வான்ஸ்) 2 மாத வாடகைக்கு மேல் கேட்கக்கூடாது. வணிக கட்டிடங்களுக்கு 6 மாத வாடகையை முன்பணமாக வசூலிக்கலாம்.
ஒருவர் வாடகைக்கு வந்த பிறகு 12 மாதங்கள் கழித்துதான் வாடகையை உயர்த்த வேண்டும். அவ்வாpறு உயர்த்துவதற்கும் 2 மாதங்கள் முன்பே நோட்டீஸ் மூலம் வாடகைதாரர்களுகக்கு தெரிவிக்க வேண்டும்.வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், வாடகைதாரர்களே அதனை சரி செய்துகொண்டு, வாடகைதொகையில் கழித்துக்கொள்ளலாம்.
வாடகைக்கு இருக்கும் வீட்டை சரிபார்க்க, உரிமையாளர் நினைக்கும்போதெல்லாம் நுழையமுடியாது. 24 மணிநேரத்துக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்க வேண்டும்.