கோயம்பத்தூர்

வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தானில் 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Published

on

நேற்று நடைபெற்ற Walkaroo Coimbatore Marathon 2025 போட்டியில், சுமார் 25,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்த இந்த நிகழ்வில் தொழில், சமூக பின்னணி என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு, கோயம்புத்தூர் நகரை உடற்பயிற்சி, ஒற்றுமை மற்றும் உற்சாகத்தின் அரங்காக மாற்றினர். தொடக்கப் புள்ளியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, Coimbatore Cancer Foundation அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து, தங்களின் தனிப்பட்ட சாதனைகளையும் இலக்குகளையும் நோக்கி ஓடினர். இந்த நிகழ்வை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆய்வாளர் பொது அதிகாரி பாலகிருஷ்ணன் IPS, , கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் IPS, இணைந்து போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.மாரத்தான் பாதை முழுவதும் நீர் வழங்கும் நிலையங்கள், மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், வழிகாட்டி குறியீடுகள் மற்றும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்ததால், ஓட்ட வீரர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டியாளர்களின் நேரங்களைத் துல்லியமாக பதிவு செய்ய டைமிங் சிப்கள் பயன்படுத்தப்பட்டன.

இதுகுறித்து கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர்
டாக்டர். பாலாஜி , கூறுகையில்,“வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தானின் 13-வது பதிப்பு, சாதனை அளவிலான பங்கேற்பும் மக்களின் பேராதரவுமுடன் மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் ஆதரவுக்கும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

மேலும், பந்தய இயக்குநர் ரமேஷ் பொன்னுசாமி கூறுகையில்,
“இந்த ஆண்டு 25,000 பங்கேற்பாளர்கள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளோம். கோயம்புத்தூர் மக்கள், காவல் துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் பல அமைப்புகள், தன்னார்வலர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி. 2026 டிசம்பரில் நடைபெற உள்ள அடுத்த பதிப்பில் அனைவரையும் மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.

Click to comment

Trending

Exit mobile version