பெரிட்டோனியல் கார்சினோமாட்டோசிஸ் (Peritoneal Carcinomatosis – PC) என்பது குடல், வயிறு மற்றும் கருப்பை (Ovarian) போன்ற மேம்பட்ட நிலை வயிற்றுப் பகுதி புற்றுநோய்களில் காணப்படும் ஒரு கடுமையான நிலையாகும். இந்த நிலையில் நோயாளிகள் கடுமையான அறிகுறிகளையும் குறைந்த ஆயுள் எதிர்பார்ப்பையும் எதிர்கொள்கிறார்கள்.
முன்னதாக, இதற்கான முக்கிய சிகிச்சையாக கீமோதெரபி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால், வயிற்றுக்குள் உள்ள பெரிட்டோனியல் புற்றுநோய்களுக்கு இரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால், கீமோதெரபி முழுமையான பலனை அளிக்காது. இந்த சூழலில், சைட்டோரெடக்டிவ் சர்ஜரி (CRS) மற்றும் ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி (HIPEC) ஆகிய இணைந்த சிகிச்சை முறைகள், நோயாளிகளின் அறிகுறிகளை குறைத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சிலருக்கு முழுமையான குணமடையும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளன.
ஆய்வுகளின் படி, அறிகுறி நிவாரணம் 26.5% முதல் 100% வரை காணப்பட்டதுடன், 90% வரை நீடித்த கட்டுப்பாடும் பதிவாகியுள்ளது. முன்னர் மேற்கொள்ளப்பட்ட டிபல்கிங் (Debulking) அறுவை சிகிச்சைகள் நோயாளிகளின் வாழ்நாளை உயர்த்தினாலும், புற்றுநோய் மீள்பிறப்பு மற்றும் கடுமையான அறிகுறிகள் அதிகமாக இருந்தன. இதைத் தவிர்க்க, பெரிட்டோனெக்டமி (Peritonectomy) — அதாவது வயிற்றுக்குள் உள்ள பெரிட்டோனியத்தை முழுமையாக அகற்றும் அறுவை சிகிச்சை — முதன்மை கட்டியுடன் சேர்த்து செய்யப்படுவதால் சிறந்த பலன் கிடைக்கிறது. பாரம்பரிய முறையில் இந்த CRS அறுவை சிகிச்சை பெரிய வெட்டுகளுடன் நீண்ட நேரம் செய்யப்படுவதால், அதிக ரத்த இழப்பு, அதிக சிக்கல்கள் மற்றும் நீண்ட மீட்பு காலம் ஏற்பட்டது. இதன் மூலம் 5 ஆண்டு உயிர்வாழ்வு விகிதம் சுமார் 31% வரை மட்டுமே இருந்தது.
நவீன லேபரஸ்கோபிக் (Keyhole) அறுவை சிகிச்சை இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தால், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை லேபரஸ்கோபிக் (கீஹோல்) முறையில் செய்ய முடிகிறது. சிறிய துளைகள் வழியாக, உயர் தெளிவு கொண்ட பெரிதாக்கப்பட்ட காட்சியுடன், வயிற்றுக்குள் உள்ள முழு பெரிட்டோனியத்தையும் மிகத் துல்லியமாக அகற்ற முடிகிறது. மேலும், ICG (Indocyanine Green) ஃப்ளூரசென்ஸ் தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய் திசுக்கள் ஒளிர்வதனால், லேபரஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளில் அவற்றை மிகத் துல்லியமாக கண்டறிந்து அகற்ற முடிகிறது.
இந்த நவீன முறையின் பலன்கள்:
குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பு,குறைந்த நாட்கள் மருத்துவமனையில் தங்குதல், விரைவான மீட்பு, ரத்த மாற்றம் குறைவதால் நோய் மீள்பிறப்பு அபாயம் குறைவு, நோயாளியின் எதிர்ப்பு சக்தி (Immune system) பாதிக்கப்படாமல் பாதுகாப்பு, சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் மேலான சிகிச்சை முடிவுகள்
ஜெம் புற்றுநோய் மையத்தின் சாதனை :
கோயம்புத்தூர் GEM Cancer Centre, GEM Hospital மேம்பட்ட வயிற்றுப் பகுதி புற்றுநோய்களுக்கு CRS–HIPEC முறையில் வெற்றிகரமான சிகிச்சை அளித்து ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக, மேம்பட்ட கருப்பை புற்றுநோய்க்கு லேபரஸ்கோபிக் முறையில் முழுமையான பாரியேட்டல் பெரிட்டோனெக்டமி அறுவை சிகிச்சையை GEM மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இதுவரை, ஐந்து நோயாளிகளில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த நோயாளிகள் அனைவரும் அறுவை சிகிச்சைக்கு முன் நியோஅட்ஜுவன்ட் கீமோதெரபி (Neoadjuvant Chemotherapy) பெற்ற பின்னர், இந்த நவீன அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேம்பட்ட கருப்பை புற்றுநோய் சிகிச்சையில் இந்தியாவில் முதன்முறையாகலேபரஸ்கோபிக் முழுமையான பெரிட்டோனெக்டமி – GEM புற்றுநோய் நிறுவனம், கோயம்புத்தூர் :
கோயம்புத்தூரில் அமைந்துள்ள GEM Cancer Institute, மேம்பட்ட கருப்பை (Ovarian) புற்றுநோய் மற்றும் வயிற்றுப் பகுதி புற்றுநோய்களின் சிகிச்சையில் ஒரு முக்கியமான மருத்துவ மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக, மேம்பட்ட கருப்பை புற்றுநோய்க்கு லேபரஸ்கோபிக் முறையில் முழுமையான பாரியேட்டல் பெரிட்டோனெக்டமி (Complete Parietal Peritonectomy) அறுவை சிகிச்சையை GEM மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
சிகிச்சை முறை :
நோயாளிகளுக்கு முதலில் உடல் முழுவதும் பரவும் நோயை கட்டுப்படுத்த நியோஅட்ஜுவன்ட் கீமோதெரபி வழங்கப்பட்டது. அதன் பின்னர்,
• லேபரஸ்கோபிக் சைட்டோரெடக்டிவ் சர்ஜரி
• ராடிக்கல் ஹிஸ்டெரெக்டமி (கருப்பை முழுமையாக அகற்றுதல்)
• கருப்பை முட்டைகள் (Ovaries) அகற்றுதல்
• வயிற்றுக்குள் உள்ள முழு பெரிட்டோனியல் அடுக்கையும் அகற்றும் முழுமையான பெரிட்டோனெக்டமி ஆகிய சிக்கலான அறுவை சிகிச்சைகள் கீஹோல் (Keyhole) முறையில் மேற்கொள்ளப்பட்டன.
• இவற்றில் இரண்டு நோயாளிகளுக்கு, முழுமையான பெரிட்டோனெக்டமிக்குப் பின்னர், லேபரஸ்கோபிக் HIPEC (Hyperthermic Intraperitoneal Chemotherapy) — அதாவது வயிற்றுக்குள் நேரடியாக சூடான கீமோதெரபி — கூடுதலாக வழங்கப்பட்டது.
இந்த உயர் தொழில்நுட்ப அறுவை சிகிச்சைகள்,
• டாக்டர் பழனிவேலு தலைமையில்
• மகப்பேறு புற்றுநோய் நிபுணர்கள் டாக்டர் கவிதா, டாக்டர் சாய் தர்ஷினி
ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர். பெரிட்டோனெக்டமி முடிந்த பிறகு, HIPEC இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபியை டாக்டர் பரத் ரங்கராஜன் வெற்றிகரமாக மேற்கொண்டார்.
பிற வயிற்றுப் பகுதி புற்றுநோய்களுக்கு சிகிச்சை :
குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களால் ஏற்படும் பெரிட்டோனியல் கார்சினோமாட்டோசிஸ்:
• புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்– டாக்டர் சிவகுமார், டாக்டர் அருள் முருகன்
• ஈசோஃபேகோ–காஸ்ட்ரிக் புற்றுநோய்கள் – டாக்டர் ஆர். பார்த்தசாரதி
• கோலோரெக்டல் புற்றுநோய்கள் – டாக்டர் ராஜபாண்டியன்
ஆகிய நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) – டாக்டர் மது சாய்ராம் அவர்களால் வழங்கப்படுகிறது.
நவீன லேபரஸ்கோபிக் / ரோபோட்டிக் முறையின் பலன்கள் :
இந்த குறைந்த துளை (Minimally Invasive) லேபரஸ்கோபிக் / ரோபோட்டிக் முறையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள்:
• விரைவான மீட்பு, குறைந்த வலி மற்றும் ரத்த இழப்பு, குறைந்த நாட்கள் மருத்துவமனையில் தங்குதல், சிறந்த வாழ்க்கைத் தரம்
• ஊக்கமளிக்கும் சிகிச்சை முடிவுகள் ஆகிய பலன்களைப் பெற்றுள்ளனர்.
சிறிய கீஹோல் துளைகள் மற்றும் உயர் தெளிவு பெரிதாக்கப்பட்ட காட்சியுடன், வயிற்றுக்குள் உள்ள புற்றுநோய் திசுக்களை மிகத் துல்லியமாக அகற்ற முடிகிறது. இதனால் நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படுவதோடு, நோயாளியின் எதிர்ப்பு சக்தியும் பாதுகாக்கப்படுகிறது.
பெண்களுக்கு புதிய நம்பிக்கை :
மேம்பட்ட கருப்பை புற்றுநோய் பொதுவாக குறைந்த உயிர்வாழ்வு விகிதம் கொண்டிருந்தாலும், முன்னதாக கண்டறிதல், சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை, நவீன கீமோதெரபி மற்றும் இலக்கு சிகிச்சைகள் மூலம் சிகிச்சை முடிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளில் 5 ஆண்டு உயிர்வாழ்வு விகிதம் 90%க்கும் மேல் காணப்படுகிறது.
ஜெம் – முன்னோடி புற்றுநோய் சிகிச்சை மையம் :
ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மையமாக விளங்கும் GEM Cancer Institute, Coimbatore, இந்த மேம்பட்ட சிகிச்சை முறைகளில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது. இதுவரை, ஐந்து நோயாளிகளில் லேபரஸ்கோபிக் முழுமையான பெரிட்டோனெக்டமி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
ஜெம் மருத்துவமனையில், மருத்துவ புற்றுநோய் நிபுணர்கள், அறுவை சிகிச்சை புற்றுநோய் நிபுணர்கள், குடலியல் அறுவை நிபுணர்கள் மற்றும் மகப்பேறு புற்றுநோய் நிபுணர்கள் இணைந்து ஒருங்கிணைந்த குழு முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நவீன சிகிச்சை, மேம்பட்ட கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவான மீட்பு, சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.ஆரம்ப விழிப்புணர்வு மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுதல், சிகிச்சை வெற்றியை பலமடங்கு உயர்த்தும்.