ரொட்டராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி கோயம்புத்தூர் “பார்வை” என்ற சமூக கண் பராமரிப்பு நிகழ்வை 21 டிசம்பர் 2025 அன்று காலை 9:00 மணிக்கு பாப்பம்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் (Coimbatore – 641016) ஏற்பாடு செய்தது“Bringing Lives Back into Focus” என்ற தலைப்போடு நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் இலவச கண் பரிசோதனை, திருத்தக்கண் கண்ணாடிகள் வழங்கியது மற்றும் 12 கண் அறுவை சிகிச்சைகள் பயனாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் பலர் தன்னம்பிக்கை, மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தினர்.
இந்த நிகழ்வு சிகரம் அறக்கட்டளை, பாப்பம்பட்டி பஞ்சாயத்து யூனியன், கோவை சங்கரா கண் மருத்துவமணை, கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், குளோபல் எஜுகேஷனல் சர்வீசஸ் மற்றும் மகிழ் அகாடமியுடன் இணைந்து நடத்தப்பட்டது
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள், சக நிகழ்ச்சி பங்காளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு பார்வை நிகழ்வை வெற்றிகரமாக நடத்தினர். இழந்த பார்வையை மீட்டெடுப்பதற்கு இது ஒரு முக்கிய படியாக இருந்ததாக தெரிவித்தனர்.