ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206 இன் கீழ், “Project Fresh Start” என்ற சமூக சேவை திட்டத்தை கோயம்புத்தூர் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 13ஆம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சாலையோரங்களில் மற்றும் நிரந்தர வசிப்பிடம் இல்லாத நபர்களை அணுகி, அவர்களுக்கு அடிப்படை சுத்தம் மற்றும் முடி வெட்டும் சேவைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அவர்களிடையே தன்னம்பிக்கை, மரியாதை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிறிய முயற்சிகளும் சமூகத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதைக் காட்டும் வகையில், இந்த திட்டம் சமூக பொறுப்புணர்வை வலியுறுத்தியது.
இந்த நிகழ்ச்சி Rtr. பிரித்விராஜ்,Rtr. பிரியா தர்ஷினி ஆகியோரின் தலைமையிலும், ரோட்டராக்ட் கிளப் தலைவர்: Rtr. சமித் குமாரன், தொடர்பு செயலாளர் Rtr. ஜஸ்ரா,நிர்வாக செயலாளர் Rtr. கோகுல் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் திட்டம் செயல்படுத்தப்பட்டது.