கோவை சுகுணாபுரத்திலுள்ள பிரபல ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் DX-EDGE இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் தலைமையில் நடந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் டிஎக்ஸ் எட்ஜ் சார்பில் சிவாஜி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (SKCET), இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (CII) உடன் இணைந்து DX-EDGE (Digital Excellence for Growth and Enterprise) எனப்படும் திட்டத்தை செவ்வாய்க்கிழமை வளாகத்தில் அறிமுகப்படுத்தியது. இந்திய ஒப்பந்தப் பத்திரம் (MoU) கையெழுத்து நிகழ்ச்சி, ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான மலர்விழி அவர்கள் மற்றும் அறங்காவலர் ஆதித்யா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. MoU பரிமாற்றத்தை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் கே. சுந்தரராமன் அவர்கள் முன்னிலையிலிருந்து மேற்கொண்டார். ஒப்பந்தத்தில் கல்வி குழும தலைமை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், டிஎக்ஸ் எட்ஜ் சார்பில் சிவாஜி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சி.ஐ.ஐ. கோயம்புத்தூர் மண்டல முன்னாள் தலைவர் கணேஷ்குமார் பேசுகையில், நமது நாட்டில் சிறு, குறு துறைக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பது, வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும். பொறியியல் பட்டதாரிகள் புதுமை சார்ந்த மனநிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம், சி.ஐ.ஐ. யின் துணை இயக்குனர் ஜெனரல் சுஜித் ஹரிதாஸ்,DX-EDGE’ன் முதன்மை ஆலோசகர் மதுவசந்தி உள்ளிட்டோர், இவ்வமைப்பின் நோக்கத்தை விளக்கினர்.
நிகழ்ச்சியில், சி.ஐ.ஐ-., துணை இயக்குனர் ஷிம்னா, கோயம்புத்துர் மண்டல நிர்வாக அதிகாரி சாய்சரண், முதல்வர் பொற்குமரன், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.