எம்எஸ்டி ரெட் டிராகன் சார்பாக ஐந்தாவது வருடத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி கோவை பேரூர் அருகே இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சுமார் 32 அணிகள் மோதும் இந்த தொடரை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி அன்பரசன் கிரிக்கெட் விளையாடி துவங்கி வைத்தார் . இந்த நிகழ்வில் நல்லறம் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ரோட்டரி. எஸ். மணிகண்டன் மற்றும் ஓகே பேக்ஸ் உரிமையாளர் கருப்பையா, செட்டிபாளையம் பிரசாத், முத்துக்குமார், எ.சி.சிவாகுமார், பிரவின், பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர் . இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பரிசுக் கோப்பையை வழங்கவுள்ளார்.