கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான ஜி.டி. நாயுடு மெமோரியல் சதுரங்க போட்டி வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அன்று ஜி.டி. பள்ளியில் நடைபெற உள்ளது.
மிரக்கிள் ஸ்கூல் ஆஃப் செஸ் சார்பில் நடத்தப்படும் இந்த “ஜி.டி. நாயுடு நினைவு சதுரங்க போட்டி”க்கு . கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கலாம். LKG முதல் 11ஆம் வகுப்பு வரை நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்படுகின்றது . ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு பிரிவிலும் 10 கோப்பைகள் வழங்கப்படுகின்றன;
மேலும் அனைத்து போட்டியாளர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டி FIDE விதிகளின்படி ரேபிட் முறையில் நடைபெறும் .
முதல் சுற்று காலை 9.30 மணிக்கு தொடங்கும்; நேரக் கட்டுப்பாடு 15 நிமிடம் + ஒவ்வொரு நகர்வுக்கும் 2 விநாடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுகளும் ஸ்விஸ் சிஸ்டம் முறையில் நடைபெறும்.
முன்பதிவு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு திரு. கே. தினேஷ் பாபு (📞 99948 60910) தொடர்பு கொள்ளலாம்.