விளையாட்டு

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்திய மகளிர் அணி சாம்பியன்

Published

on

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஆறு அணிகள் கொண்ட டி20 போட்டி நவம்பர் 11 அன்று டெல்லியில் தொடங்கியது. பெங்களூரில் நடந்த சில போட்டிகளுக்குப் பிறகு, நாக் அவுட்களுக்கான இடம் இப்போது இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

கொழும்புவில் நடந்த பைனலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய நேபாள அணி, 20 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன் சேர்த்தது. பின்னர் 115 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முதல்முறையாக பார்வையற்றோருக்காக நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

Click to comment

Trending

Exit mobile version