தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனைக் காக்கவும் இந்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி அதன் படி பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. தற்போது தொழிலாளர் சட்டங்களில் மிகப் பெரிய மாற்றத்தை வெளியுட்டுள்ளது. இனி அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே சட்டம் தான். இதன் மூலம் சம்பளம், சமூக பாதுகாப்பு எல்லாம் எளிமையாகும். நம் நாட்டின் தொழிலாளர் நிர்வாக முறையை நவீனமயமாக்கும் நோக்கில், ஏற்கனவே உள்ள 29 ஒருங்கிணைத்து நான்கு சட்டத் தொகுப்புகளாக உருவாகியுள்ளது.
தொழிலாளர்களுக்கு பயன்கள் என்ன ?
இந்தப் புதிய சட்ட கட்டமைப்பில் , பல பழமையான விதிகளை சுலபமாக்குவது, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவது, பாதுகாப்பு தரங்களை பலப்படுத்துவது மற்றும் நாட்டின் தொழிலாளர் நடைமுறைகளை உலகளாவிய முறைகளுக்கு கொண்டுசெல்வது ஆகியவற்றை இலக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது .
- பெண்களுக்கு சம ஊதியம், மரியாதைக்கு உத்தரவாதம்
- வேலைப் பாதுகாப்பு மற்றும் நிலையான வேலைவாய்ப்பு உருவாக்குதல்
- அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு மற்றும் பிற சமூக பாதுகாப்பு சலுகைகள்.
- வேலையில் சேரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய நியமனக் கடிதங்கள்( அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ).
- நிலையான கால ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு உத்தரவாதமான பணிக்கொடை.
- 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர சுகாதாரப் பரிசோதனை
- கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் உத்தரவாதம்
- ஆபத்தான துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 100% சுகாதாரப் உறுதி
- அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதியம் உத்தரவாதம்
- சர்வதேச தரநிலைகளின்படி தொழிலாளர்களுக்கு சமூக நீதி உத்தரவாதம்.
வரலாற்று சிறப்புமிக்க நாள் பிரதமர் பெருமிதம் :
இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் : எனது உழைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நமது அரசு தொழிலாளர்கள் நலனுக்காக நான்கு புதிய சட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இது. இது நாட்டின் தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கும். இது விதிமுறைகளுக்கு இணங்குவதை மிகவும் எளிதாக்கும். இந்த சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் நமது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.