பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பீகார் சட்டசபை தேர்தல் முடிவு வெளிவந்து வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலைப் பெற்றது . இறுதியில் பா.ஜனதா 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன . மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி பலத்தை பரிசீலிக்கும் தேர்தலாக பீகார் தேர்தல் கருதப்பட்டது. தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்பில் பெருபாலான கருத்துக்கணிப்புகள் இந்தியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வெளியிட்டது. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று நிதிஷ் குமார் 10-வது முறையாக பீஹார் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றிருந்தால் களம் வேற மாறிருக்க கூடும். ராகுல் காந்தின் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் தீவிரமாக இருந்தும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, இந்த இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று பலராலும் சொல்லப்பட்டது . ஆனால் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் வியூக நிபுணராகக் கருதப்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி இந்த தேர்தலில் இரண்டு பெரிய கட்சியை எதிர்த்து களம் கண்டது. பீகார் முழுவதும் சுமார் 2 ஆண்டுகளாக தொடர்ந்து பிரச்சாரம் செய்துள்ளார் . இருப்பினும் அவரது கட்சியால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை .
பீஹார் முடிவு தாக்கத்தை ஏற்படுத்துமா ?
தேர்தலை எதிர் நோக்கி காத்திருக்கும் தமிழ்நாடு பீஹார் தேர்தல் முடிவு தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுக மக்கள் நல திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது . இதனால் மீண்டும் திமுக ஆட்சியே தமிழக மக்கள் ஆதரிப்பார்கள் என திமுகவினார் கூறுகின்றனர். ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும் பீகார் முடிவு தமிழகத்தில் எதிர் ஒலிக்கும் என எதிர்க்கட்சியினர் சூளுரைக்கின்றனர். பீஹார் தேர்தல் முடிவு தமிழகத்திலும் எதிரொலிக்குமா ? சீமான், விஜய் நிலைப்பாடு என்ன, கூட்டணிக்கணக்குகள் மாறுமா? எனப் பல கருத்துக்களை பொதுவெளியில் மக்கள் பேசுவதை பார்க்கமுடிகிறது. தாக்கத்தை ஏற்படுத்து எனவும் தாக்கத்தை ஏற்படுத்தாது என ஒரு தரப்பும் கூறிவருகின்றனர்.
பீகார் மக்களின் இந்த முடிவு, எதிர்நோக்கும் தேர்தல்களத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதே இப்போதைய ஹாட் டிராபிக்காக வளம் வருகிறது.