கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில், பிராய்லர் ஒருங்கிணைப்பு குழு (பவுல்ட்ரி ஃபார்மர்ஸ் ரெகுலேட்டரி அமைப்பு) சார்பில் கோழிப்பண்ணை மற்றும் கோழி வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், இறந்த கோழிகள் மற்றும் கோழி கழிவுகளை மறுசுழற்சி செய்ய ‘ரெண்டரிங் பிளானட்’ (Rendering Plant) அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிக அளவில் உற்பத்தி நடைபெறுவதால், இந்தப் பகுதியில் இதை அமைத்துக் கொடுப்பது மறுசுழற்சி செய்ய ஏதுவாக இருக்கும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாகப் பண்ணை கோழி ஒழுங்குமுறை குழு மேலாண்மை ஆலோசகர் ராம்ஜி மற்றும் டாக்டர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில், “பிராய்லர் கோழி சத்தான உணவு” என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய கறிக்கோழி உட்கொள்வதால் எந்தவிதமான தீங்கும் ஏற்படுவதில்லை என்றும், குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த புரோட்டின் பிராய்லர் கோழிகள் தான் மேலும், கறிக்கோழியின் தனிமனித நுகர்வு 4 கிலோவில் இருந்து 10 கிலோ வரை உயர்ந்துள்ளது. கோழி விற்பனை அதிகமானதால் மக்காச்சோளம் விளைச்சலும் அதிகமாகி, விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஜிஎஸ்டி வரி குறைப்பால் மற்ற மாநிலங்களுக்குச் செல்லும்போது வரி இல்லாமல் பயணிக்க முடிகிறது. கறிக்கோழி வளர்ப்பில் தமிழகம் தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது என்று தெரிவித்தார்