கோயம்பத்தூர்

எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் நிறைய தொழில்கள் செய்வேன்!

Published

on

கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அதில் : நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதில் என்ன தவறு. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நான் மண்ணை சாப்பிட முடியுமா? நான் தொழில் செய்கிறேன். நான் யாரையும் மிரட்டி பணம் பறிக்கவில்லை. என்னுடைய தொழில் நான் செய்கிறேன். என்னுடைய விவசாய தொழிலை நான் செய்கிறேன்.

நான் அரசியல் செய்கிறேன். இதில் எதை நீங்கள் தவறாக பார்க்கிறீர்கள். நான் எங்கிருந்து சாப்பிடுவேன். எனது குழந்தைகளுக்கு எப்படி பீஸ் கட்டுவேன். எதை செய்ய வேண்டுமானாலும் நியாயமான முறையில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை எந்த தொழிலும் செய்யக்கூடாது என்று கையை கட்டி போட்டு வைத்தீர்கள் என்றால் நான் எதை சாப்பிடுவேன். என் காருக்கு எங்கிருந்து டீசல் போடுவேன். இந்த கம்பெனியில் ஜிஎஸ்டி கட்டவில்லை சொல்லுங்க, வரி கட்டவில்லை என்றால் சொல்லுங்கள்.

நான் எந்த தொழிலும் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு இங்கு யாருக்கு உரிமை இருக்கிறது. நான் செய்யக்கூடிய தொழிலில் யாருக்கு பாதிப்பு இருக்கிறது. எந்த தொழிலை ஆரம்பிப்பதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது. கட்சியில் மாநில தலைவராக நான் இல்லை. ஓடுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. என்னுடைய வேலையை செய்வதற்கு எனக்கு நேரம் இருக்கிறது. விவசாயம் செய்வதற்கு நேரம் இருக்கிறது. எனக்கு பொருள்கள் ஈட்டுவதற்கு நேரம் இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.

Click to comment

Trending

Exit mobile version