Sports

ஆன்ட் ஸ்போர்ட்ஸ் சார்பில் ‘பெடலிங் ஃபீட் 2025’ சைக்கிள்தான் பதக்கம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது!

Published

on

கோயம்புத்தூர்:

ஆன்ட் ஸ்போர்ட்ஸ் சார்பில் நடைபெற்ற ‘பெடலிங் ஃபீட் 2025’ சைக்கிள்தான் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் ஆர்வமுள்ள பலரும் உற்சாகமாக பங்கேற்றனர்.இந்தப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களின் சாதனைகளை பாராட்டும் வகையில், பதக்கம் மற்றும் பரிசளிப்பு விழா இன்று (9.11.2025) கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள போர்ஸ் மோட்டார் ஷோரூமில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு பல்வேறு சைக்கிள் ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். நிகழ்வில், பெடலிங் ஃபீட் 2025 போட்டியில் சிறந்து விளங்கிய பங்கேற்பாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் கலந்து கொண்ட சைக்கிள் ஆர்வலர்கள், உடல் நலனுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் சைக்கிள் ஓட்டுதல் மிக முக்கியமானது என தெரிவித்தனர். இது நமது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதோடு, மனஅமைதியையும் நிலைநிறுத்துகிறது என்றும், மேலும், இளைஞர்கள் அதிக அளவில் இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இத்தகைய நிகழ்வுகள் உடற்பயிற்சி பழக்கத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கும் என தெரிவித்தனர்.இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து, போட்டியாளர்களை பாராட்டி ஊக்குவித்த ஆன்ட் ஸ்போர்ட்ஸ் குழுவினருக்கு பங்கேற்பாளர்கள் தங்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

விழாவின் முடிவில், பெடலிங் ஃபீட் 2025 போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆன்ட் ஸ்போர்ட்ஸ் குழுவினர் விஜய் ஆனந்த் , கார்த்தி, ரமேஷ் , விவேகானந்த, மணிவண்ணன், பிரேம் பிரசாத்  நன்றி ஆகியோர் தெரிவித்துக்கொண்டனர் .

.

Click to comment

Trending

Exit mobile version