பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது விமான டிக்கெட் முன்பதிவில் சில மாற்றங்களை செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முன்வந்துள்ளது. தற்போதைய DGCA-வின் புதிய அறிவிப்பின்படி, பயணிகள் முன்பதிவு செய்த 48 மணிநேரம் வரை தங்கள் விமான டிக்கெட்டுகளை இலவசமாக ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியும். அதாவது, நீங்கள் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்து திடீரென உங்கள் திட்டங்களை மாற்றினால், அல்லது தவறான முன்பதிவு செய்தாலோ எந்த ஒரு அபராதம் இல்லாமல் 48 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை மாற்றவும், ரத்து செய்யவும் முடியும்.