Sports

கே.கே.நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் டென் டென் செஸ் அகாடமி நடத்திய – 11வது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் செஸ் போட்டி!

Published

on

சென்னை: டென் டென் செஸ் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட 11வது தமிழ்நாடு மாநில மட்ட சிறுவர் சதுரங்க போட்டி கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி சென்னை கே.கே.நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. ஒருநாள் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், அரியலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருவாரூர், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி உள்பட தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 469 சிறுவர் வீரர்கள் பங்கேற்றனர்.

மொத்தம் 205 கோப்பைகள் மற்றும் 50 பதக்கங்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு வழங்கப்பட்டன. சிறந்த திறமையாளர்களுக்கும் சிறந்த சதுரங்க அகாடமிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இது சிறுவர் சதுரங்க வளர்ச்சியில் தனிநபர் திறமையையும் நிறுவன பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.பிரிவுகள்: U7, U9, U11, U13, U25 கிரிதிக் கே (செங்கல்பட்டு) ரிதுஷனா ஏ (சென்னை) வின்னவன் பி (சென்னை) சியேனா எச் (செங்கல்பட்டு) – விஷ்வஜித் ஜி (சென்னை), ஜாநவி வி (சென்னை) –ராகவ பிரபாகரன் குமார் (திருவள்ளூர்) , ஸ்மேகா ஆனந்த் (செங்கல்பட்டு) சரண் கிருஷ்ணா டி (இராணிப்பேட்டை) அனன்யா ஏ.பி (சென்னை) ஆகியோர் வெற்றபெற்றனர்.

பரிசளிப்பு விழா:

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முக்கிய விருந்தினர்களாக, மீனாட்சி பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பால பரணிதரன், மீனாட்சி பொறியியல் கல்லூரி,விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்,டாக்டர் பி.என். பூவிழி டென் டென் செஸ் அகாடமி தலைவர் எஸ். ஆர். ஜானகிராமன், எஸ். ஜே. அமர்நாத், டென் டென் செஸ் அகாடமி, செயலாளர், ஒருங்கிணைப்பாளர், தின இதிகை சென்னை மண்டலத் தலைவர் சக்திவேல், பிரதான நடுவர் ஐஏ எஸ். கனிமொழி, ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி சிறுவர்களின் சதுரங்க திறமையை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த தளமாக அமைந்தது. பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பெருமிதம் அடைந்தனர்.

Click to comment

Trending

Exit mobile version