விண்ணில் பாய்ந்த பாகுபலி ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 4,410 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோளுடன் பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டையில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று (நவம்பர் 2) அதிகாலை நடைபெற்ற முக்கிய நிகழ்வாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) தனது LVM3 ராக்கெட் மூலம் CMS-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இந்திய கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புகளை வழங்குவதற்காக செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது . விண்ணில் ஏவப்பட்டுள்ள 4,410 கிலோ எடை கொண்ட CMS 03 செயற்கைக்கோள் ரூ.1,600 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைலில் சிக்னல் இல்லை என்ற கவலை வேண்டாம்.. இஸ்ரோவின் புதிய முயற்சி