சென்னை அண்ணா சாலை, அரசினர் தோட்டத்தில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம்சார்பில் நடைபெற்ற,தேசிய தன்னார்வ இரத்ததான நாள்-2025″ நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கோவையில் அதிக இரத்த தானம் வழங்கிய “தளபதி இரத்ததான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திமுக தீர்மானக்குழு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ நா. கார்த்திக் அவர்களுக்கு சிறப்பு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க .ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் சார்பில் வழங்கப்பட்ட விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை காண்பித்து திமுக தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக் வாழ்த்துப் பெற்றார்.