உள்ளூர் செய்திகள்

கோவையில் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு !

Published

on

தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2025 கோயம்புத்தூரில் அடுத்த பெரிய முதலீட்டாளர்கள் நிகழ்வாக, StartupTN அமைப்பால் நடத்தப்படும் தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2025 (Tamil Nadu Global Startup Summit 2025) நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு தொழில்முனைவோர்களையும் முதலீட்டாளர்களையும் இணைத்து, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் புதுமைகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 9 மற்றும் 10, தேதிகளில் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகதில்நடைபெறுகிறது

பேச்சாளர்கள், முதலீட்டாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஸ்டால்கள் மற்றும் நெட்வொர்க்கிங் அமர்வுகள் இடம்பெறும்.100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள் என்றும், 500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பிட்ச்கள் மற்றும் சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

150 மாணவர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அடையாளம் காணவும் இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமையும்.

Click to comment

Trending

Exit mobile version