சென்னை: நடிகர் மட்டுமல்ல, பைக்–கார் ரேஸர் என்ற அடையாளத்துடனும் உலகம் அறியும் அஜித்குமார், மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஸ்பெயினில் நடைபெற்ற Creventic 24H கார் ரேஸில், அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த அணியை, அஜித் தானே கேப்டனாக நடத்தி வருகிறார்.
முன்னதாக துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேஸில் மூன்றாவது இடம், பிரான்சின் 12 மணி நேர போட்டியில் இரண்டாவது இடம், மேலும் ஐரோப்பிய போட்டியில் மூன்றாவது இடம் என பல வெற்றிகளை அணி பெற்றிருந்தது.
இந்த வெற்றியுடன், அஜித்குமார் ரேஸிங் அணி மீண்டும் இந்தியாவை சர்வதேச ரேசிங் மேடையில் உயர்த்தியுள்ளது. பரிசுக் கோப்பையை பெற்றுக்கொள்ளும் தருணத்தில், தனது அணியினரும் குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்துச் சென்ற அஜித்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அண்மையில் பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு ரசிகர்களும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.