திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் மிகப்பெரிய லாட்டரி விழாவாகக் கருதப்படும் ஓணம் பம்பர் லாட்டரி 2025-இன் குலுக்கல் இன்று (செப்டம்பர் 27) நடைபெறுவதாக இருந்தது. ரூ.25 கோடி ஜாக்பாட்டை யார் வெல்வார்கள் என்ற ஆவலுடன் லாட்டரி ரசிகர்கள் காத்திருந்த நிலையில், குலுக்கல் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏன் ஒத்திவைப்பு?
கேரள லாட்டரி விற்பனையாளர்கள் மற்றும் ஏஜென்ட்கள் முன்வைத்த கோரிக்கையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய கனமழை பாதிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் காரணமாக டிக்கெட் விற்பனை சற்று மந்தமாக இருந்ததால், குலுக்கல் தேதியை மாற்ற வேண்டும் என அவர்கள் கோரியதாகத் தெரிய வருகிறது.
புதிய தேதி எப்போது?
கேரள லாட்டரித்துறை அறிவிப்பின்படி, ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் தற்போது அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும். அதுவரை லாட்டரி டிக்கெட் விற்பனை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.