உள்ளூர் செய்திகள்

காலாண்டு – ஆயுதபூஜை தொடர் விடுமுறை ஆரம்பம்

Published

on

சென்னை, செப். 26:
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறைகள் கிடைக்கவுள்ளதால், பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், சுற்றுலா திட்டங்களை வகுக்கவும் தொடங்கியுள்ளனர்.

இந்த விடுமுறை காலத்தை முன்னிட்டு, பள்ளிகளின் காலாண்டுத் தேர்வுகள் இன்று (செப். 26) நிறைவடைகின்றன. இதனையடுத்து நாளை மறுநாள் (செப். 28) முதல் அக்டோபர் 12 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை பண்டிகை அக்டோபர் 1ம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு வரும் 27ம் தேதி முதல் தொடர் விடுமுறை தொடங்குகிறது. இதனால் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய மாநில போக்குவரத்துத்துறை 3,380 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 16 முதல் 23 வரை சென்னையிலிருந்து மொத்தம் 10,529 பேருந்துகள் – அதில் 4,253 சிறப்பு பேருந்துகள் – இயக்கப்பட உள்ளதாகவும், 9,963 சிறப்பு சேவைகள் உட்பட மொத்தம் 24,607 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னை–கோவை இடையே கூடுதல் சிறப்பு ரயில் சேவைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) முதல் அக்டோபர் 12 வரை இயக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திங்கள்கிழமையும் கோவையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து கோவைக்கும் சிறப்பு ரயில்கள் ஓடும்.

Click to comment

Trending

Exit mobile version