நிகழ்ச்சிகள்

தேவாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த கெளரவம்!

Published

on

1990 களில் இளம் தலைமுறையினரை தன் இசையால் கட்டிப் போட்ட இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் தேனிசை தென்றல் தேவா. இவரது இசை தேனிசையாக நம் செவிக்கு இன்றும் உணவாகவும் மனதுக்கு இன்பமாகவும் இருந்துவருவதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று கானா, மெலடி, குத்துப் பாட்டு எனப் பலவிதமான பாடல்களை இசை ரசிகர்களுக்கு வழங்கிய இசை மேதை தேவா அவர்கள். பல ஆயிரம் பாடல்களை கொடுத்த தேவா அவர்களுக்கு சமீபத்தில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, உலகத் இசை பெரியார்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

சமீபத்தில் தேவா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவருக்கு, அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் உயர்ந்த மரியாதையுடன் வரவேற்றுள்ளனர். நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையில் அவரை அமரவைத்து, தமிழ் கலாச்சாரத்தின் பாரம்பரிய சின்னமான செங்கோல் கொடுத்துக் கெளரவித்துள்ளனர்.தேவா அவர்கள் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.தமிழ்த் திரைத்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 1989-ல் சந்தனக்காற்று என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Trending

Exit mobile version