தனிப்பட்ட நலனில் பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை” எனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் – பிரதமர் மோடி.
பருத்தி, சோளம் மற்றும் சோயா பீன்ஸ்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கேட்கிறது அமெரிக்க அரசு.
அமெரிக்காவின் பருத்தி, சோளம், சோயாவை இறக்குமதி செய்தால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அமெரிக்க வேளாண் பொருள் இறக்குமதிக்கு சம்மதம் தெரிவிக்க மத்திய அரசு மறுப்பு.
இந்திய விவசாயிகள் நலனில் ஒரு போதும் மத்திய அரசு சமரசம் செய்து கொள்ளாது.
இந்திய விவசாயிகளின் நலனுக்கே எப்போதும் மத்திய அரசு மிகவும் முன்னுரிமை கொடுக்கும்.
விவசாயிகளின் நலனுக்காக என்னுடைய தனிப்பட்ட நலன்களில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என பிரதமர் மோடி திட்டவட்டம்.
அமெரிக்க வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி இல்லை என்பதில் மோடி உறுதியுடன் உள்ளதாக தகவல்.
இந்திய விவசாயிகளின் நலனுக்காக எவ்வளவு விலை கொடுக்கவும் மத்திய அரசு தயார், விவசாயிகளை கைவிடப்போவதில்லை என பிரதமர் மோடி திட்டவட்டம்.
“இந்திய பொருட்களுக்கு எவ்வளவு கூடுதல் வரி விதித்தாலும் அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை” – பிரதமர் மோடி.