இந்தியா

பாக். தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்! மத்திய அரசு அதிரடி

Published

on

ஹல்காம் தீவிரவாத தாக்குதல் : ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் பலியானதாக அச்சம்.

விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல். படுகாயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதி. இந்த தாக்குதலை அடுத்து பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது  கூட்டத்திற்கு பிறகு, வாகா எல்லையை மூட முடிவு.இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேறவும் உத்தரவு.

பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது. பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள், மே 1ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும்.

சார்க் விசா ஒப்பந்த‌த்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை என – மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் .

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது பாகிஸ்தான் தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை அகற்றியது டெல்லி காவல்துறை; காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய அரசு நடவடிக்கை.

பஹல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, ஏப்ரல் 27ம் தேதி வரை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளார் ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவின் முதன்மை கல்வி அதிகாரி.

இதேபோல் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது.பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு.

 

 

Click to comment

Trending

Exit mobile version