பூமிக்கு அருகில் ஆபத்தான முறையில் கடக்க இருக்கும் Apophis என்ற அபாயகரமான சிறுகோள் குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் பாரிய அளவு கிரகத்துடன் மோதினால் பேரழிவுக்கான ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. விண்வெளிப் பொருள்கள் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான இஸ்ரோவின் நெட்வொர்க் (NETRA) சிறுகோளின் பாதையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என தலைவர் டாக்டர். எஸ். சோமநாத் கோள்களின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.அப்போபிஸ் என்ற இந்த விண்கல் 13 ஏப்ரல் 2029 பூமியை தாக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி மைதானம் அளவிற்கு பெரியதாகவும், ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் போன்ற தோற்றத்தையும் கொண்டுள்ளது.தற்போது இந்த விண்கல் பூமியிலிருந்து 32,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இது போன்ற மிகப்பெரிய விண்கல் இதுவரை பூமிக்கு அருகில் வந்ததில்லை என கூறப்படுகிறது