Connect with us

அரசியல்

இணைந்த கைகள் ! ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பு ! அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவரது அடையாறு இல்லத்தில் இன்று சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர் . நடந்த வழக்குகளில் வெளிவந்த தீர்ப்பை அடுத்து பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அரசியலில் தனக்கு செல்வாக்கு இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் திருச்சியில் கடந்த மாதம் மாநாடு நடத்தினர் ஓ.பன்னீர்செல்வம் . அதில் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்கு தினகரன், சசிகலா கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர்கள் இருவரும் கலந்துகொள்ளவில்லை, இருப்பினும் அவர்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வதிக்கு இருப்பதாக செய்திகள் உலவந்தனர். நேரம் வரும் பொழுது தினகரன் மற்றும் சசிகலா அவர்களை சந்திப்பேன் என கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று அவருடைய ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு:

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், ‘லட்சியத்தை அடைய இரு இயக்கங்களும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். ஒரே லட்சியம்தான் அ.தி.மு.கவை மீட்டெடுப்பதுதான். எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க காக்க ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசிய டி.டி.வி.தினகரன், ‘சி.பி.ஐ, சி.பி.எம் போல இணைந்து செயல்படுவோம். அம்மாவின் உண்மையான தொண்டர்களிடம் கட்சி இருக்க வேண்டும். கட்சியை ஹைஜேக் செய்தவர்களிடமிருந்து கட்சியை மீட்க வேண்டும். அ.தி.மு.க மீட்டெடுக்க வேண்டும் என்று நானும், சகோதாரர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து செயல்படவுள்ளோம். என்றார் மேலும் “அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு” எனக் கூறினார். நாங்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் அறிந்தவர்கள். எங்களிடம் மனதளவில் எந்த வெறுப்பும் இல்லை.. நாங்கள் சுயநலத்துடன் இணையவில்லை.. உண்மையான தொண்டர்கள் கையில் அதிமுக ஒப்படைப்போம்’ எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், ‘சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். அவர் தற்போது வெளியூரில் இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் சசிகலாவைச் சந்திப்பேன். அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும். பொதுச்செயலாளர் வழக்கு இன்னமும் நிறைவு பெறவில்லை’ என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்

வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

Published

on

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி nநடைபெற இருக்கிறது , அனைத்து கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கிய நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக அறிவிக்கப்படாமல் இருந்தது . இன்று இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

வேட்பாளர் பட்டியல்

பொன்னேரி (எஸ்சி)- துரை சந்திரசேகர்

வேளச்சேரி- அசன் மௌலானா

ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி)- செல்வப்பெருந்தகை

சோளிங்கர்- ஏ.எம். முனிரத்தினம்

ஊத்தங்கரை (எஸ்சி)- ஆர்.குப்புசாமி

கிருஷ்ணகிரி- ஏ. செல்ல குமார்

பென்னாகரம்- ஜிகேஎம் தமிழ் குமரன்

ஆத்தூர் (எஸ்சி)- எஸ்.கே.அர்த்தனாரி

ஈரோடு கிழக்கு- கோபிநாத் பழனியப்பன்

உதகமண்டலம்- பி.ராமச்சந்திரன்

கவுண்டம்பாளையம்- கே.பி. சூர்ய பிரகாஷ்

சிங்காநல்லூர்- V. ஸ்ரீநிதி நாயுடு

துறையூர் (எஸ்சி)- விச்சு லெனின் பிரசாத்

கடலூர்- ஏ.எஸ். சந்திரசேகரன்

மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகமது

அறந்தாங்கி- டி.ராம சந்திரன் காரைக்குடி- எஸ்.மாங்குடி

உசிலம்பட்டி- டி.சரவண குமார்

சிவகாசி- கணேசன் அசோகன்

திருவாடானை- ராம கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம்- எஸ்.ஊர்வசி அமிர்தராஜ்

சங்கரன்கோவில் (எஸ்சி)- சங்கை கணேசன்

அம்பாசமுத்திரம்- வி.பி. துரை

நாங்குநேரி- ரூபி மனோகரன்

குளச்சல்- டாக்டர் தாரகை குத்பர்ட்

விளவங்கோடு- டி.டி.பிரவீன்

கிள்ளியூர்- எஸ். ராஜேஷ் குமார்

Continue Reading

அரசியல்

தேர்தலில் பிரச்சாரம் அண்ணாமலை உறுதி

Published

on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட அறிவிக்கபட்டுள்ள வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஊழல், அலட்சியம் மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்த… தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதர சகோதரிகளின் பெரும் ஆதரவை பாஜக வேட்பாளர் அனைவரும் பெற்றுள்ளனர்.

நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பரந்த அளவிலும், ஒரு நோக்கத்துடனும் முன்னேறியுள்ளது.

தேசம் முன்னேறிச் செல்லும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவமிக்க, சுயநலமிக்க திமுக அரசால் தமிழகம் பின்தங்கியுள்ளது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தொண்டனாகிய நான், வெற்றி பெறும் நமது பாஜக மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்.

Continue Reading

அரசியல்

தமிழக தேர்தல் – இன்று வேட்புமனு தாக்கல்

Published

on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று தொடங்குகிறது

இன்று தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி 11AM – 3PM வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மனுக்கள் மறுநாள் (ஏப்-7) பரிசீலிக்கப்பட உள்ளன

வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9ஆம் தேதியே கடைசி நாளாகும்

Continue Reading

Trending